தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு

6 May 2026, 12:58 am
உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு

உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு

உதகை, மே.5- உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டினஸ் சாலையில் காட்டு யானை புகுந்த தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதி யில் கரடி, புலி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின் றன.

இவற்றில் கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதால் மனித - விலங்கு மோதல் கள் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, முதல் முறையாக கடந்த ஆண்டு கோடை சீசன் சமயத்தில் குன்னூரில் இருந்து ஒரு யானை முதல் முறையாக ஊட்டி அடுத்த 7 கி.மீ., தொலைவில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்தது.

தொட்டபெட்டா மலை சிகரம் மூடப்பட்டு, காட்டு யானை வேறு பகுதிக்கு சென்ற பின்னர் திறக்கப்பட்டது.

இதன் பின்னர் ஊட்டியை ஒட்டி உள்ள பன்சிட்டி அருகில் உள்ள வனப் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது.

இத னால் யானையின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், செவ்வாயன்று அதி காலை திடீரென இந்த காட்டு யானை உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டின்ஸ் சாலையில் வலம் வந்தது.

அங்குள்ள தனி யார் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று அங்கிருந்து, சாலையில் ஒய்யார மாக நடந்து சென்றது.

நகரில் மேலும் ஒரு சில இடங்களுக்கு சென்றது.

அதிகாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப் பகுதியில் யானை சுற்றித்திரிந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்த காய்கறி தோட்டங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

தற்போது, எல்க்ஹில் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இங்கு வனத்துறையினர் ட்ரோன் வாயிலாக கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.