தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகையில் நிலவும் காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

20 May 2026, 12:10 am
உதகையில் நிலவும் காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
<p><strong>உதகையில் நிலவும் காலநிலையால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி</strong></p><p>உதகை, மே 19- உதகையில் காலை நேரத்தில் வெயிலும், மதியத்திற்கு பிறகு பனிமூட்டம் மற்றும் மழை என மாறுபட்ட காலநிலை நிலவுவதால் சுற்று லாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங் கள் கோடை சீசன் என்பதால், சுற்றுலாப் பய ணிகள் குடும்பத்துடன் உதகைக்கு வருகின்ற னர். தற்போது மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால், வழக்கத்தை விட சுற்றுலாப் பய ணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரண மாக நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்க ளுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளி யிட்டது. அதன்படி, செவ்வாயன்று காலை முதல் உதகையில் வெயில் அடித்த நிலை யில், மதியத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டது. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் உதகை நகர் முழுவதும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் தாவர வியல் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிய டைந்தனர். கடும் பனிமூட்டம் காரணமாக அவதியடைந்த வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனால் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின் றது. போக்குவரத்து போலீசார் வாகனங் களை சரி செய்து அனுப்பினர். ஆனாலும், நீண்ட நேரம் ஆனதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு சுற்றுலாத் தளத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் சற்று அவதியடைந்தனர். இதற் கிடையே, உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. காலை யில் வெயில் மதியத்திற்கு பின்னர் பனிமூட் டம் மாலையில் மழை என பல்வேறு கால நிலைகள் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.