மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி
17 May 2026, 12:45 am

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி

உதகை, மே 16- உதகை, வண்டிப்பேட்டை பகு தியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூட வேண்டும் என அப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல் பட்டு வரும் நிலையில், தற்போதை அரசின் உத்தரவுப்படி 27 கடை களை மூட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் அதிகாரிக ளுக்கு டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக, உதகை மெயின் பஜார் பகுதியிலுள்ள மதுக்கடை மற்றும் பந்தலூரில் உள்ள மதுக்கடை மூடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, உதகை நகரில் மேலும் 5 கடை கள் மூடப்பட்டுள்ளன.

கமர்சியல் சாலையில் மூன்று கடைகள் மூடப் பட்டுள்ளன. இதனால், வண்டி பேட்டை பகுதியிலுள்ள மதுக்கடை யில் கூட்டம் குவிகிறது.

உதகை மார்க்கெட் அருகே இப்பகுதி உள் ளதாலும், வண்டிபேட்டை பகுதி யில் விவசாயி கருவிகள், பட்டறை கள், அங்காடிகள் உள்ளதால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இப்பகுதி உள்ளது.

மக்கள் நடமாட் டம் அதிகமுள்ள இப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டபோதே, மக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரி கள் கடுமையாக எதிர்த்தனர்.

அதை யும் மீறி அப்பகுதியில் மதுக்கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மார்க் கெட் சுற்று வட்டாரத்தில் 5 மதுக் கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரி யர்கள் வண்டிபேட்டை கடையை முற்றுகையிட்டு வருகின்றனர்.

அப் பகுதிலேயே மதுக்கூடம் செயல் படுவதால், மதுப்பிரியர்கள் மது வாங்கி அங்கேயே குடிக்கின்றனர்.

சிலர் அடாவடியிலும் ஈடுபடுகின்ற னர்.

மேலும், மதுக்கூடம் சுகாதார மற்ற முறையில் நடப்பதால், அப் பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதையெல்லாம் சகித்துக் கொண்டு அப்பகுதியில் வியாபாரி கள் வியாபாரம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

மேலும், வாடிக்கை யாளர்கள் திரும்பி சென்று விட கூடும் என்பதால், விரைந்து வியா பாரம் செய்கின்றனர்.

அப்பகுதி யில் மதுக்கடை செயல்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக் கள் குறிப்பாக, பெண்கள் முகத்தை சுளித்தப்படி, மூடியப்படியே செல் கின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிக முள்ள இப்பகுதியில் மதுக்க டையை மூட வேண்டும் என அப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.