தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

28 Jun 2026, 2:09 am
தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
<p><strong>தொடர் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்</strong></p><p>உதகை, ஜூன் 27- தொடர் விடுமுறை காரணமாக நீல கிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால், முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத் துக்கு அணிவகுத்தன. சர்வதேச சுற்றுலாத் தலமான நீல கிரி மாவட்டத்தில், ஐரோப்பிய நாட்டு காலநிலை நிலவுவதால், தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ் வொரு ஆண்டும் 30 லட்சத்துக்கும் அதி கமான சுற்றுலாப் பயணிகள் உத கைக்கு வருகின்றனர். சமீபத்தில் ஏப்ரல் மே ஆகிய கோடை சீசனில் சுமார் 8 லட்சம் பேர் நீலகிரிக்கு வந்து சென்ற னர். இதைத்தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மொக ரம் பண்டிகையை ஒட்டி வெள்ளியன்று அரசு விடுமுறையாக அமைந்ததால், அடுத்து சனி, ஞாயிறு என தொடர்ச்சி யாக மூன்று நாட்களில் விடுமுறை ஏற் பட்டது. இதன் காரணமாக நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு படை யெடுத்து வந்தனர். உதகை அரசு தாவர வியல் பூங்காவின் பல்வேறு இடங் களை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்த்த னர். தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சிக்கு வர முடியாத பலரும் இந்த முறை விடுமுறையை பயன்படுத்தி வந் தனர். இத்தாலியன் பூங்கா பகுதி மற்றும் தாவரவியல் பூங்காவின் பெரிய புல் வெளி மைதானத்தை ஆர்வமுடன் பார்த்தனர். இதேபோல் உதகை படகு இல்லத் தில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந் தனர். உதகை - கூடலூர் சாலையிலுள்ள சுற்றுலாத் தலங்களில் கேரளம் மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக ளவு இருந்தது. ஒரே நாளில் சூட்டிங் மட்டம், பைன் பாரஸ்ட், பைகாரா ஆகிய இடங்களையும், கூடலூர் தெப்பக்காடு யானைகள் முகாமையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்பதால் அப்பகுதியில் கேரளம் மாநில சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகளவு இருந்தது. கடந்த ஒரு வாரமாக மழை இருந்த நிலையில், வெள்ளியன்று மழை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் வரு கையால் உதகை - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் உதகை - கூடலூர் சாலை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.