தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை

12 hours before
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை

உதகை, செப்.9-ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால், பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கடுமையான தடை மற்றும் கண்காணிப்பு அமலில் உள்ளது. ஆனாலும், அதையும் மீறி பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் சிக்கி பணமிழப்பு, கடன், தற்கொலை என பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கிறது. இதைகட்டுப்படுத்த ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்த பிறகும், முழுமையாக இந்த பிரச்சனை தீரவில்லை. இந்நிலையில், உதகையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்ததீபக்குமார் போர்டே-விற்கு (30), திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் நீலகிரி மாவட்டம், குன்னூரிலுள்ள கேந்திரிய வித்யாலயாபள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். இதற்காக குடும்பத்துடன்அரசு குடியிருப்பில் தங்கியிருந்தார். கடந்த சில நாட்களாக கடன்பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். கடன் பிரச்சனையை தீர்க்க ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி பணம் சேர்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால், ஆன்லைன் விளையாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக பணமிழப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கில் கடன் உருவானது.

இதனால் தீபக்குமார் போர்டே கடும் மன உளைச்சலில் இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில்இருந்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய மனைவி கடன் பிரச்சனையை சரிசெய்ய முயற்சி செய்யுமாறும், இனிமேல் ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாட வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த தீபக்குமார் போர்டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டது, என்றனர். இதுகுறித்து புதுமந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.