சிற்றுந்து இயக்க எதிர்ப்பு: வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம்
18 Aug 2026, 9:54 pm

சிற்றுந்து இயக்க எதிர்ப்பு: வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம்

நீலகிரி, ஆக.18-உதகையில் சுற்றுலாத் தலங்களுக்கு இடையே சிற்றுந்துகள் (மினி பேருந்துகள்) இயக்க மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும்வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தின் உதகை நகரம், சர்வதேச சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது. வார நாட்களில் 5 ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 10 ஆயிரம் பேரும்,கோடை சீசனின் போது, தினமும் சுமார் 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும்சுற்றுலாப் பயணிகள் தாவரவியல்பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், படகு இல்லம்உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பயணிக்க, வாடகை கார் அல்லது ஆட்டோ, வேன், ஆகியவற்றை எடுத்துச்செல்கின்றனர்.

உதகையில் மட்டும் சுமார் 2000 ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்குகின்றன. இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலாத் தலங்களுக்கு இடையே 3 மினிபேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வரும் ஆட்டோ மற்றும் மேக்சி கேப், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும்உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, இந்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனுஅளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆவேசமடைந்த ஆட்டோ, டேக்ஸி, மேக்சி கேப்,வேன் ஆகியவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திங்களன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் ஏடிசி திடல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், இந்த அனுமதியை மாவட்ட நிர்வாகம் திரும்பப்பெறாவிட்டால், விரைவில் உதகையில் இயக்கப்படும் ஆட்டோக்கள், டேக்ஸிகள், மேக்சி கேப்கள், வேன்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என்றனர்.