தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விடுதிக்கட்டணம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு! கோடை சீசனை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் கவலை

10 May 2026, 12:27 am
விடுதிக்கட்டணம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு! கோடை சீசனை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் கவலை

விடுதிக்கட்டணம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு! கோடை சீசனை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் கவலை

உதகை, மே 9- உதகையில் தங்கும் விடுதிக் கட்டணம் மற்றும் உணவுப் பொருட் களின் விலை பல மடங்கு உயர்ந் துள்ளதால், கோடை சீசனை கொண் டாட வந்த சுற்றுலாப் பயணிகள் கவ லையடைந்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு, ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நா டகா, ஆந்திரா மற்றும் வெளி நாடு களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

வழக்கமான நாட் களை காட்டியிலும், வார விடுமுறை தினங்களிலும் கூட்டம் அலைமோ தும். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலாப் பய ணிகளை கவர்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கண் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

பள்ளி விடுமுறை விடப்பட் டதால், குழந்தைகளுடன் உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் 3 முதல் 4 நாட்கள் வரை தங்கியி ருந்து, பல்வேறு சுற்றுலாத் தலங்க ளுக்கு, இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்பதால், தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள் ளது.

குறிப்பதாக, ரூ.400 என்றி ருந்த கட்டணம் ரூ.1000 எனவும், ரூ.1000 என்றிருந்த கட்டணம் ரூ.4 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் சுற்றுலாப் பயணி கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் நிலையில், உணவுப்பொ ருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.15 என்றிருந்த தேநீர் ரூ.25 வரையும், ரூ.25க்கு விற்கப்பட்ட பூரி செட் ரூ.100 ஆக வும், ஒரு இட்லி ரூ.25க்கும் விற் பனை செய்யப்படுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு, சிலிண்டர் தட்டுப்பாடும் ஒரு கார ணமாக அமைந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்வால், உணவுப்பொருட்களின் விலை யும் உயர்ந்துள்ளன.

பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், சில நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.​​​​​​​

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.