தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்மேற்கு பருவமழை தொடக்கம்உதகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை

8 Jun 2026, 11:00 pm
தென்மேற்கு பருவமழை தொடக்கம்உதகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
<p><strong>தென்மேற்கு பருவமழை தொடக்கம்உதகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை</strong></p><p>உதகை, ஜூன் 8- நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி யுள்ள நிலையில், பெருமழை மற்றும் பேரிடர்களை பொது மக்கள் எதிர்கொள்வது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தீய ணைப்புத் துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திங்களன்று நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். அந்த வகையில், கேரளா வில் தீவிரமடைந்துள்ள பருவமழை தற்பொழுது தமிழகத்தி லும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிறு காலை முதலே பரவலாகச் சாரல் மழை பெய்து வருகிறது. மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக் கும் வகையில், சாலை ஓரங்களில் மண்மூட்டைகளை அடுக்கு வது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற் கொண்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக 283 இடங்கள் கண்டறி யப்பட்டு, அந்தப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணி கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்கவிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 29 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, உதகை எல்க்ஹில் பகுதியில் வரு வாய்த்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து நடத்திய பேரிடர் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கனமழையினால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கிக் கொள்பவர்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் எப்படி மீட்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் நேரடிச் செயல்விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, அவசர காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் என் னென்ன, பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக எந்தெந்த கட்டுப்பாட்டு எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக் கப்பட்டது. உதகை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.