பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை
5 Jun 2026, 10:22 pm
<p>உதகை, ஜூன் 5- </p><p>உதகை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுப முகூர்த்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு கள் நடப்பது வழக்கம். அதை கருத்தில் கொண்டு, 100 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவகங்களில் 150 டோக் கன்களும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் சார் பதிவ கங்களில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். இந்நிலை யில், வெள்ளியன்று முகூர்த்த நாள் என்பதால், பல சார் பதிவாளர் அலுவலகங்களில் இப்படி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழ்நிலையில் தான் தமிழ கம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 60 சார் பதிவாளர் அலு வலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் புகுந்து சோதனை செய்து ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத் தில் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலை மையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் வியாழனன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். ஆவணங்கள் சரியாக இருக் கின்றனவா? முறைகேடு ஏதாவது நடந்துள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
