முந்தய பக்கம்

உதகையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

4 Nov 2026, 12:02 am
உதகையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>உதகையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உதகை, நவ.3-துணை சுகாதார நிலையத்திலிருந்து, இடைநிலை சுகாதாரப் பணியாளாரை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம,பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.துணை சுகாதார நிலையத்திலிருந்து, இடைநிலை சுகாதாரப் பணியாளாரை அப்புறப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சுகாதாரத்துறையில் பல ஆண்டுகளாகஉள்ள விஎச்என், எஸ்எச்என், சிஎச்என், மருத்துவர், வட்டார மருத்துவர் சிஎச்ஓ, டிஎச்ஓ, என்ற கட்டமைப்பு சீர்குலைக்கும் என்பதால், அந்த பெயரை அவர்களுக்கு வழங்குவதை தவிர்க்கவேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் செய்யும்தாய் - சேய் நலப்பணியை இடைநிலை சுகாதாரப் பணியாளர் செய்வதாக உண்மைக்கு புறம்பாக அறிக்கைஅனுப்புவதை நிறுத்த வேண்டும். பாலின பாகுபாடற்ற பதவி உயர்வு நிலை 1 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,கிராம சுகாதார செவிலியர் சங்கமாவட்டச் செயலாளர் சக்குபாய், பகுதி நேர சுகாதார செவிலியர் சங்கத் தலைவர் கலைமதி, சமுதாயசுகாதார செவிலியர் சங்கத் தலைவர் கோவிந்தம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram