தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளை நிலங்கள் அருகே குவிக்கப்படும் குப்பைக்கழிவுகள் ஊராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்!

22 Sept 2026, 11:16 pm
விளை நிலங்கள் அருகே குவிக்கப்படும் குப்பைக்கழிவுகள் ஊராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்!

விளை நிலங்கள் அருகே குவிக்கப்படும் குப்பைக்கழிவுகள் ஊராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம்!

உதகை, செப்.22-நஞ்சநாடு பகுதியில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் அருகே குவிக்கப்படும் குப்பைக்கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் தொற்று அபாயம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 100க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இக்கிராமங்களை சுற்றி பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்இருந்து நாள்தோறும் டன் கணக்கில்குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகள் நஞ்சநாடு கிராமத்தின் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகில்ஒட்டிய பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இங்கு குப்பைகளை கொட்டக்கூடாது என்று பொதுமக்கள் பல வருடங்களாக கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று நஞ்சநாடு கிராம மக்கள் ஊராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள்கூறுகையில், அழகான எங்கள் கிராமம், குப்பை தொட்டி போன்று அலங்கோலமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை உட்கொண்ட 13 மாடுகள்உயிரிழந்துள்ளன. இதனால் பலரதுவாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல் வனவிலங்குகள் இந்த குப்பைக்கழிவுகளை உட்கொண்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் குப்பைகள் நனைந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக நடந்துகூட செல்ல முடியவில்லை. குடியிருப்பு பகுதிகளிலும் தங்க முடியவில்லை.காற்றடிக்கும் சமயத்தில் குப்பைகள் எல்லாம் அங்கும் இங்கும் பறந்து குடியிருப்பு பகுதிகளுக்கு மீண்டும் வந்து விடுகின்றன.வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பைகள் விழுகின்றன. வாகன ஓட்டிகள் நிலை தருமாறு விபத்து ஏற்படும்அபாயம் உள்ளது. அதேபோல் குப்பைகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் அதிகஅளவு உள்ளன.

நஞ்சநாடு பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை உடனடியாகஅகற்ற வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த குப்பை விஷயத்திற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.