தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேட்டிங் மைதானத்தை நகராட்சியே ஏற்று நடத்த வலியுறுத்தல்

31 Oct 2026, 12:11 am
ஸ்கேட்டிங் மைதானத்தை நகராட்சியே ஏற்று நடத்த வலியுறுத்தல்

ஸ்கேட்டிங் மைதானத்தை நகராட்சியே ஏற்று நடத்த வலியுறுத்தல்

உதகை, அக்.30-உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை நகராட்சிநிர்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை நகர்மன்றக் கூட்டம், நகராட்சித் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது. ஆணையர் தாமோதரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், நகராட்சி துணைத்தலைவர் ரவிக்குமார் பேசுகையில், மஞ்சனக்கொரை பகுதியில் உள்ள பழைய மின் மயானத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். கடந்த 2009ஆம் ஆண்டு நீலகிரியில் பெரியஅளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ள நிவாரண நிதி ரூ.100 கோடி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஒதுக்கீடுசெய்தார். துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்தஆ.ராசா ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் 946 சிறு பாலங்கள் மழை நீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டது. அதன்பின், கனமழை பெய்தாலும், உதகையில்இருந்து பர்லியார் வரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. தற்போது கூட கோவை மாவட்ட எல்லையில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக நீலகிரியில் மழை பெய்த போதிலும், எந்த ஒரு மழை நிவாரண நிதி குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. உதகைநகரில்ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்காதவாறு உதகை ஏரியின் நீர் மட்டத்தை குறைக்க வேண்டும், என்றார்.

இதேபோன்று, நகர்மன்ற உறுப்பினர்கள் பேசுகையில், அனைத்து அணைகளும் சேறும், சகதியும் நிறைந்து காணப்படுகிறது. மார்லிமந்து, டைகர்ஹில் என அனைத்து முக்கிய அணைகளிலும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, மழைநீரை சேமித்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏடிசி பகுதியில் இருந்து பாம்பேகேசில் செல்லும் சாலையில் மரண குழி ஒன்று உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தல், முக்கோணம் பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகளால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவைகளைஅப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்கேட்டிங் மைதானத்தை நகராட்சி நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.