தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராட்டத்தில் ஈடுபட்டதால் தொழிலாளர்களை பழிவாங்குவதா? சிஐடியு தலைமையில் மீண்டும் போராட்டம்

2 Jul 2026, 1:53 am
போராட்டத்தில் ஈடுபட்டதால் தொழிலாளர்களை பழிவாங்குவதா? சிஐடியு தலைமையில் மீண்டும் போராட்டம்
<p><strong>போராட்டத்தில் ஈடுபட்டதால் தொழிலாளர்களை பழிவாங்குவதா?</strong></p><p>சிஐடியு தலைமையில் மீண்டும் போராட்டம்</p><p>உதகை, ஜூலை 1- உதகை நகராட்சி நிர்வாகத்தின் பழி வாங்கும் நடவடிக்கையை கண்டித்து, சிஐடியு தலைமையில் தொழிலாளர்கள் புதனன்று மீண் டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியில் தூய்மை மற்றும் பரா மரிப்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய தற்செயல் விடுப்பு, மருத் துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு வழங் கப்படுவதை உறுதி செய்ய வேண் டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினசரி 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படு வதை நிறுத்தி, தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தலை மையில் தொழிலாளர்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதைத்தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில், அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றி தருவதாக நகராட்சி நிர்வா கம் உறுதி அளித்ததின் அடிப்படை யில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தொழிற்சங்க நிர் வாகிகள் மீது பழிவாங்கும் நடவ டிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட நிர்வாகி கள் மீது நகராட்சி நிர்வாகம் பழி வாங்கும் போக்காக ‘மெமோ’ அளித்துள்ளது. இந்த நடவடிக் கையை கண்டித்து தொழிலாளர் கள், புதனன்று மீண்டும் காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். பழிவாங்கும் நடவடிக் கையை கைவிடாவிட்டால், தொடர் போராட்டம் நடைபெறும் என சிஐ டியு மாவட்டச் செயலாளர் வினோத், பொருளாளர் நவீன் சந்திரன் உள் ளிட்டோர் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.