மக்களுக்கு கிடைக்காத குடிநீர், விடுதிகளுக்கு கிடைப்பது எப்படி?
22 May 2026, 12:14 am

மக்களுக்கு கிடைக்காத குடிநீர், விடுதிகளுக்கு கிடைப்பது எப்படி?

உதகை, மே 21- உதகையில் பொதுமக்களுக்கு மட்டும் குடிநீர் கிடைக்கவில்லை; ஆனால், தங்கும் விடுதிகளுக்கு எவ்வாறு கிடைக்கிறது? என நகர்மன்றக் கூட்டத்தின் கவுன்சிலர் கள் கேள்வி எழுப்பினர். த

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தேர்தல் நடத்தை விதி முறைகள் விளக்கிக்கொள்ளப்பட் டதால், இரண்டு மாதங்களுக்கு பிறகு நீலகிரி மாவட்டம், உதகை நகர்மன்றக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது.

தலைவர் எம்.வாணீஸ்வரி தலைமை வகித்தார். ஆணையர் நித்யா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள், உதகை நகரில் கடந்த பல நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படா தது குறித்து பேசினர்.

வீடுகளுக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாத நிலையில், தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்க ளுக்கு சீராக தண்ணீர் விநியோகிப் படுவது எப்படி? என கேள்வி எழுப்பி னர். குடிநீர் விநியோகப் பிரிவில் உள்ள பணியாளர்கள் முறையாக தண்ணீர் விநியோகம் செய்வ தில்லை. அவர்கள் யார் என்றே தெரிவதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

இதே நிலை தொடர்ந்தால் நகராட்சி நிர்வாகத் தின் பெயர் முழுவதும் கெட்டு விடும், என்றனர். இதற்கு பதில ளித்த ஆணையர் நித்யா, பார்சன்ஸ் வேலி பகுதியில் மின் தடை காரண மாக குடிநீர் விநியோகம் பாதிக்கப் பட்டது.

அது சரி செய்யப்பட்டு விட் டது. தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படும். எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற் படாது, என்றார். கவுன்சிலர் தர்ணா இந்நிலையில், உதகை தாவர வியல் பூங்கா பகுதியில் ஆக்கிர மிப்பு தொடர்பாக நகராட்சி நகர திட்ட அலுவலர்களை கண்டித்து கவுன்சிலர் அபுதாஹீர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். நகராட்சி திட்ட ஆய்வாளர், ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவ தாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ஆணையர், அப்பகு தியை நில அளவை அளவீட்டாளர் மூலம் அளந்து, ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பின் னர் கவுன்சிலர் அபுதாஹீர் தர் ணாவை கைவிட்டார். தொடர்ந்து, கவுன்சிலர்கள் ஜார்ஜ் மற்றும் முஸ்தபா, உதகை நகராட்சி புதிய மார்க்கெட் கட்டுமானம் மெத்தன மாக நடந்து வருவாக தெரிவித்த னர்.

கட்டுமானப்பணிகள் முற்றிலு மாக நின்ற போய்விட்டதாக கூறி னர். ஆணையர் நித்யா, மார்க்கெட் கட்டுமானப்பணி நடந்து வருகிறது.

உரிய நேரத்தில் கட்டுமானத்தை முடிக்காத ஒப்பந்ததாருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவடைந்துள்ள நிலை யில், பணிகளை விரைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

தொடர்ந்து, குடிநீர், கழிவுநீர், நடை பாதை, தெருவிளக்கு உட்பட அடிப் படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட் டது.