தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் கைது

7 May 2026, 2:05 am
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் கைது
<p><strong>சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: குண்டர் சட்டத்தில் கைது</strong></p><p>உதகை, மே 6- உதகையில் இரண்டு சிறுமிக ளுக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகையை சேர்ந்த 2 சகோதரிகளுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சகோதரிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தை களை கவனிக்க முடியாததால் கூட்டு குடும்பமாக உள்ள அவர்களு டைய தாயார் வீட்டில், குழந்தை களை அனுப்பியிருந்தனர். அதில் ஒரு குழந்தைக்கு 7 வயதும், மற் றொரு குழந்தைக்கு 8 வயதும் ஆகி றது. பாட்டி வீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் அவ்வப்போது பக் கத்து வீடுகளுக்கு விளையாட சென்று வந்தன. இந்நிலையில், பாட்டி வீட்டுக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிறு மிகளிடம் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிகள் இருவ ரும் கழிப்பறை செல்லும்போது அடி வயிற்றில் வலி இருப்பதாக கூறி யுள்ளனர். இதனால் உறவினர்கள் சிறுமிகளை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு, சிறுமிகள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்குள் ளாக்கப்பட்டிருப்பது தெரியவந் தது. இதுகுறித்து சிறுமிகளிடம் விசாரணை நடத்தியதில், வீட்டுக்கு வந்த வாலிபர் ஆட்கள் இருந்த போதே, மற்றொரு அறையில் வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், இதுகு றித்து வெளியில் யாரிடமும் கூறக் கூடாது என்ற சிறுமிகளை மிரட்டிய தும் தெரிய வந்தது. இதுகுறித்து உதகை அனைத்து மகளிர் போலீ சார் மற்றும் குழந்தைகள் நல அதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில், காவல் துறை யினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், வாலிபர் மீது குண்டர் சட்டத்தில் நட வடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, ஆட்சிய ருக்கு பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத் தில் கைது செய்ய கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நகல் கோவை மத்திய சிறையில் உள்ள வாலிபரிடம் வழங்கப்பட் டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.