ஜீப் மீது லாரி மோதி விபத்து:பெண் தொழிலாளி உயிரிழப்பு!
9 hours before

ஜீப் மீது லாரி மோதி விபத்து:பெண் தொழிலாளி உயிரிழப்பு!

உதகை, அக். 28-எமரால்டு எல்லக்கண்டி பகுதியில் கேரட் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் மீது லாரி மோதி நடந்த விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகில் எமரால்டு பகுதியில் இருந்து உதகை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இத்தலார் பகுதியில் கேரட் எடுக்கும் வேலையை முடித்துக் கொண்டு தொழிலாளர்கள் சிலர் ஒரு ஜீப்பில் எமரால்டு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அந்த ஜீப்பை எமரால்டு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்று உள்ளார்.

எல்லக்கண்டி கிராமம் அருகே வரும்போது லாரியும், ஜீப்பும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்துக்குள்ளாகின. இதில், ஜீப்பில் பயணம் செய்த டிரைவர் சரவணன் உள்பட எமரால்டு பகுதியை சேர்ந்த கேரட் அறுவடை பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கலைவாணி (34), மரியஜெனிபர் (47), சிந்தாமணி (50) ஜார்ஜ் (49), வள்ளி (48), நாகம்மாள் (52) மற்றும் லாரி டிரைவர் மாதஷே் (20) ஆகியோர் உட்பட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர், காவல்துறைக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். காயமடைந்த 8 பேரும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கலைவாணி என்பவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எமரால்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.