தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மண்சரிவால் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து

2 Jan 2026, 3:33 pm
மண்சரிவால் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து
<p><strong>மண்சரிவால் உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஜன.2- மழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்ட தால், மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலைரயில் போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டுள்ள தாக ரயில்வே நிர்வாகம் அறிவித் துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. தற் போது விடுமுறை கால சிறப்பு மலை ரயிலும் காலை 9.10 மணிக்கு இயக் கப்பட்டு வருகிறது. உள்நாடு மட்டு மின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பய ணிகளையும் ஈர்க்கும் இம்மலை &nbsp;ரயில் செல்லும் இருப்புப்பாதை யில், வியாழனன்று இரவு பெய்த &nbsp;மழை காரணமாக மண் சரிவு ஏற் பட்டுள்ளது. அடர்லி மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்க ளுக்கு இடையே பல்சக்கர தண்ட வாள பாதையின் மீது இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற் பட்டு, தண்டவாளத்தின் மீது மண் சகதியும் பாறைகளும் விழுந்து கிடந்தன. இதனால் வெள்ளியன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் &nbsp;நிலையத்தில் இருந்து புறப்பட்ட மலைரயில் கல்லார் ரயில் நிலை யத்தில் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே திரும்பியது. &nbsp;இதனிடையே கல்லார் ரயில் நிலையத்திலிருந்து மலை ரயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலை யம் திரும்புவதால், மேட்டுப்பாளை யம் நகரில் உள்ள காட்டூர் ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால், ரயில் வர தாமதமானதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. ரயில் திரும்பி வருவதில் சரி யான உத்தரவுகள் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டதால் கோபம டைந்த வாகன ஓட்டிகள் அந்த &nbsp;இடத்திலேயே சாலை மறியலில் ஈடு பட்டனர். இதன்பின் மலைரயில் கடந்து சென்றதால் கேட் திறக்கப் பட்டு, காட்டூர் பகுதியில் போக்குவ ரத்து சீரானது. மலை ரயில் பாதை யில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் அகற்றும் சீரமைப்பு பணிகள் நிறை வடைந்தவுடன் நீலகிரி மலை ரயில் சேவை துவங்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.