உதகை மலை ரயில் கட்டணம் 5 சதவிகிதம் உயர்வு
21 Feb 2026, 4:39 pm
<p><strong>உதகை மலை ரயில் கட்டணம் 5 சதவிகிதம் உயர்வு</strong></p>
<p>உதகை, பிப்.21- உதகை மலை ரயில் சாதாரண கட்டணம் சனியன்று முதல் 5 சதவி கிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மலை ரயில் 1899 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்புமிக்க மலை பயணிகள் ரயில்களில் ஒன்றாகும். இந்த மலை ரயில் சேவை யுனெஸ் கோவால் உலக பாரம்பரிய சின்ன மாக அறிவிக்கப்பட்டு, தற்போது 3 வகையாக இயக்கப்படுகிறது. அதன்படி, தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதி நாள் கள், பண்டிகைகள் போன்ற வற்றில் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா, சந்திப்பு நிகழ்ச்சிக் காக முழு ரயிலை தனியாக வாட கைக்கு எடுப்பது (சார்ட்டர் சிறப்பு ரயில்கள்) என இயக்கப்படுகிறது. இதில், சாதாரண கட்டண ரயில்க ளில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூ ருக்கு ரூ.500, இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வசூலிக் கப்பட்டு வருகிறது. குன்னூர் - உதகை இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, இரண்டாம் வகுப் பில் பயணிக்க ரூ.150 வசூலிக்கப் படுகிறது. மேட்டுப்பாளையம் - உதகை இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1,000, இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.550 வசூலிக் கப்படுகிறது. இந்நிலையில், சனி யன்று முதல் இக்கட்டணம் 5 சதவி கிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உதகை மலை ரயிலில் சாதாரண கட்டணம் கடைசி யாக 2020 ஆம் ஆண்டு பிப்.18 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அதிகரிக்கப்படவில்லை. ஆனால், மேட்டுப்பாளையம் - குன் னூர், குன்னூர் - உதகை மற்றும் மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படும் மலை ரயி லின் இயக்கச் செலவுகள், பரா மரிப்பு செலவுகள் மற்றும் ஊழியர்க ளின் ஊதியம் ஆகியவை கணிச மாக உயர்ந்துள்ளன. இதை ஈடுகட் டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரயில் பிரிவில் சாதா ரண ரயில்களின் அடிப்படை கட்ட ணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள் ளது. சாதாரண ரயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சத விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்ட ணங்கள் போன்றவற்றில் எந்த மாற் றமும் இல்லை. ஜிஎஸ்டி தொடர்ந்து பொருந்தும் விகிதத்தில் வசூலிக் கப்படும். மேலும், உதகை மலை ரயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
