உதகை அரசுக் கல்லூரி ரத்ததான முகாமில் மாணவர்களின் சாதி விவரங்கள் சேகரிப்பு! ஒன்றிய அரசின் ‘யுவ பாரத்’ அமைப்பின் நிர்வாகி மீது புகார்
1 Oct 2026, 11:03 pm

உதகை அரசுக் கல்லூரி ரத்ததான முகாமில் மாணவர்களின் சாதி விவரங்கள் சேகரிப்பு! ஒன்றிய அரசின் ‘யுவ பாரத்’ அமைப்பின் நிர்வாகி மீது புகார்

உதகை, அக். 1-உதகை அரசு கலைக் கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமில், ஒன்றிய அரசின் அமைப்பைச் சேர்ந்தவர் புகுந்து, மாணவர்களின் சாதி விபரங்களை சேகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ- மாணவியர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது, மாணவர்களிடம் தனியாக படிவம் வழங்கி அதில்பெயர், வயது, பயிலும் பட்டப்படிப்பு, சாதி, தொலைபேசி எண் உள்ளிட்டவை பெறப்பட்டுள்ளது.இதனைப் பார்த்த சில மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.

அதில் பேசிய மாணவர் ஒருவர், ரத்த தானம் செய்வதற்குஎதற்கு சாதி விவரங்கள் எல்லாம் கேட்கிறார்கள். சாதி பார்த்துத் தான் ரத்தம் பெறுவார்களா, கோபத்துடன் கேள்விஎழுப்பி உள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கத் துவங்கினர்இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது, தாங்கள் எந்த படிவத்தையும் வழங்கவில்லை என்றும், பிரச்சனை குறித்துகாவல்துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் கல்லூரி முதல்வர் எபனேசர் விளக்கம் அளித்துள்ளார்.

“ரத்ததான முகாம் தொடங்கியபின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின்நீலகிரி மாவட்ட மேரா யுவபாரத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரஞ்சித் குமார், முகாமில் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதி விவரங்கள் உட்பட தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய படிவங்களை விநியோகித்து தகவல்களை பெற்றுள்ளார். இது கல்லூரியை ஏமாற்றும் செயலாகும். எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார். இப்புகார் தொடர்பாக உதகை பி1 காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.