உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை கோவைக்கு செல்லும் நோயாளிகள்! - - ஷேக் அமீன் - - ஷேக் அமீன் -
10 Jul 2026, 9:21 pm

உதகை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை கோவைக்கு செல்லும் நோயாளிகள்! - - ஷேக் அமீன் -

- ஷேக் அமீன் -

உதகை, ஜூலை 10- நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிறுநீரகவியல் மருத்துவர் மற்றும் பாம்புக்கடிக்கு தேவையான சிகிச்சை வசதிகள் இல்லாததால், நோயாளிகள் நீலகிரி யிலிருந்து கோவைக்கு அனுப்பப்படும் அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறப்பு வாய்ந்த மருத்துவமனை

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவத்தேவைக் காக கோவை அல்லது கேரளம் மாநிலம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கிணங்க, உதகை எச்பிஎப் பகுதியில் நிலம் தேர்வு செய் யப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.499 கோடி மதிப்பீட்டில், 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை கட்டிடம் கட்டப்பட்டது. சிம்லாவிற்கு அடுத்த படியாக மலைப்பிரதேசத்தில் கட்டப் பட்டுள்ள இரண்டாவது மருத்துவக்கல்லூரி என்பது இதன் சிறப்பம்சமாகும். இந்த மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், 12 அறுவை சிகிச்சை அரங்கங்களு டன் அமைக்கப்பட்டுள்ளன. பழங்குடி மக்க ளுக்கென தனியாக 50 படுக்கை வசதிகள் ஏற்ப டுத்தப்பட்டு உள்ளன.

ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை, அப் போதைய முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு ஏப்.6 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். ஏப்.23 ஆம் தேதி முதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மேலும், அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை பகுதிக்கு புதிதாக பேருந்து வசதி, பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி தரப்பட்டது. இந்நிலையில், பல்வேறு வசதி கள் இதுவரை செய்துதரப்படாததால், நீலகிரி மருத்துவக்கல்லூரி தொடங்கியும் சரியான சிகிச்சை பெற முடியாமல் மக்கள், கோவை அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளி கள் அலைக்கழிக்கப்பட்டு அவதிப்படுகின்ற னர். சமீபத்தில், பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்த மருத்துவமனையில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) வசதிகள் மற்றும் சிறப்பு மருத்து வர்கள் இல்லாத குறை வெளிச்சத்திற்கு வந் துள்ளது. அதன்படி, மசினகுடி அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிவா என்பவரை, கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர் மசின குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அதன் பின்னர் கோவை மருத்துவக் கல்லூரிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டு சிகிச் சைக்கு பிறகு வீடு திரும்பினார். இதுகுறித்து அவரின் மகன் எஸ்.பிரகாஷ் கூறுகையில், மசினகுடி அரசு மருத்துவமனையில் மருத்து வர்கள் யாரும் இல்லாததால், பாம்பு கடித்த என் தந்தையை அங்கேயும், பின்னர் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கும் அழைத்துச் சென்றோம். மசினகுடியில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் நாங்கள் ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. உண்மையில், என் தந் தையை அழைத்துச் செல்ல உதகையிலிருந்து ஆம்புலன்ஸ் வர வேண்டியிருந்தது. அதன் பின்னரே நாங்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை சென்றடைந்தோம். மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, டயாலிசிஸ் இயந்திரம் மற்றும் அதை இயக்கு வதற்கான நிபுணர்கள் இல்லாத காரணத்தா லும், என் தந்தையை கோவை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றும்படி, மருத்துவர்கள் எங்களிடம் கூறினர். பாம்பு கடியால் ஏற்கனவே வலியாலும் தலைசுற்றலா லும் அவதிப்பட்டு வந்த என் தந்தையை, மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து கோவைக்கு அழைத்துச்சென்றது எங்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, என் தந்தை குணமாகி வீடு திரும்பினார். அவருக்கு டயாலிசிஸ் தேவைப்படாது என்று அங்கிருந்த மருத்து வர்கள் தெரிவித்தனர். அவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகள் மற்றும் மருந்துகள் அவரது கிரி யாட்டினின் அளவைக் குறைக்க உதவியது, என்றார்.

மருத்துவர்கள் பற்றாக்குறை

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட் டத்தில் பாம்பு கடி அதிகமாக ஏற்படும். விதி முறைகள் படி பாம்பு கடிக்கு தேவையான சிகிச்சை வசதி இங்கு இருக்க வேண்டும். ஆனால், அது இல்லாதது ஏமாற்றம் அளிக்கி றது. எனவே, அதற்கு தேவையான சிகிச்சை வசதிகளை இங்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயர் பணியிடங்கள் மற்றும் பேராசிரியர் பணியிடங்களில் மருத்து வர்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதை சரி செய்ய தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.