கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
11 Aug 2026, 11:14 pm

இறுதிகட்ட மாணவர் சேர்க்கை

உதகை, ஆக.11-உதகை அரசு கலைக்கல்லூரியில் இளநிலைபாடப்பிரிவுகளுக்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கை ஆக.14 ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 2026 – 27 ஆம் கல்வியாண்டிற்கான. இளநிலைபாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டுக்கு 1100 இடங்கள் காலியாக இருந்தன. இதில் இதுவரை நடந்தபல்வேறு கட்ட கலந்தாய்வு மூலம் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின. இந்நிலையில், மீதமுள்ள இடங்களை நிரப்ப கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து கல்லூரிமுதல்வர் எபினேசர் கூறுகையில், இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் இளம் வணிகவியல்பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இறுதி நாள் ஆக.14 ஆம் தேதியாகும்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணை நிலை தேர்வு முடிவுகளும் வெளிவந்துள்ள நிலையில், ஏற்கனவே www.tngasa.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ள மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கும் வரும் ஆக.14 ஆம் தேதி வரையிலான வேலை நாட்களில் கல்லூரியில்வந்து விண்ணப்பிக்கலாம். சேர்க்கையின் போதுஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், ஆன்லைன் சாதி சான்று, 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை,ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல்பக்கம்ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட்அளவு புகைப்படம் ஆகியவை தலா 3 பிரதிகள் கொண்டு வர வேண்டும். மேலும், ஆன்லைன் வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றின் அசல்மற்றும் நகல் எடுத்து வர வேண்டும். ஆன்லைன் சாதி சான்று இல்லாத பட்சத்தில் தற்போதுள்ள சான்று,மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.3700, இதர பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு ரூ.4300 சேர்க்கை கட்டணம், என்றார்.