முந்தய பக்கம்

எரிவாயு நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்

4 Jun 2026, 10:43 pm
எரிவாயு நிறுவனத்தை முற்றுகையிட்ட மக்கள்
<p>உதகை, ஜூன் 4-</p><p>உதகையிலுள்ள சமையல் எரிவாயு நிறுவனம், தங்களுக்கு முறையாக எரிவாயு விநியோகம் செய்வதில்லை எனக்கூறி, பொதுமக்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம், உதகையில் ஏடிசி பகுதியில் உள்ள தனியார் சமையல் எரிவாயும் நிறுவனம், பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகத்தை கடந்த பல மாதங்களாக முறையாக செய்யாமல் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மலை மாவட்டத்தில் எரிபொருள் தேவை அதிகம் இருக்கும் சூழலில், பள்ளி திறந்திருக்கும் நிலையில், தாங்கள் மிகவும் அவதிபடுவதாகக்கூறி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த நிறுவனத்தை வியாழனன்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் சமாதானம் பேசி, வியாழனன்று 200 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, எரிவாயும் விநியோகம் செய்யப்படும். இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram