தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்திலேயே முதன்முறையாக உதகையில் மாணவர்களுக்கு இலவச கோல்ஃப் பயிற்சி

27 Jun 2026, 1:01 am
தமிழகத்திலேயே முதன்முறையாக உதகையில் மாணவர்களுக்கு இலவச கோல்ஃப் பயிற்சி
<p><strong>தமிழகத்திலேயே முதன்முறையாக உதகையில் மாணவர்களுக்கு இலவச கோல்ஃப் பயிற்சி</strong></p><p>உதகை, ஜூன் 26- தமிழகத்திலேயே முதன்முறையாக நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்காக குழிப்பந்தாட்டம் (Golf) விளையாட்டிற்கான இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்களின் விளையாட்டாக கருதப்படும் இந்த விளையாட்டை, பின்தங்கிய மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தி தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. உதகை நகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாமில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். டெல்லியில் இருந்து வந்திருந்த பிரபல கோல்ஃப் பயிற்சியாளர் தலைமையில், சிறப்பு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் மாணவர்களுக்கு கோல்ஃப் விளையாட்டின் அடிப்படை நுட்பங்களை கற்றுக் கொடுத்தனர். பயிற்சி வழங்கும் அகாடமி நிர்வாகிகள் கூறுகையில், இந்த விளையாட்டு பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கும் இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் குறிப்பிட்ட அளவிலான மைதானத்தில் நடைபெறுகின்றன. ஆனால் கோல்ஃப் விளையாட்டு பல ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் பல்வேறு சுற்றுகளாக நடைபெறுவதால், மாணவர்களின் தனித்திறன், கவனத்திறன் மற்றும் மன ஒருமைப்பாட்டை வளர்க்க உதவுகிறது. இந்த பயிற்சி மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்றனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், பள்ளிகளில் கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் குறித்து அறிந்திருந்தோம். ஆனால் கோல்ஃப் விளையாட்டு எங்களுக்கு புதுமையான அனுபவமாக உள்ளது. இந்த இலவச பயிற்சி எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.