தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகை மலர் கண்காட்சிக்கு முதல்வர் வருகை? இறுதிகட்டப்பணிகள் தீவிரம்

12 May 2026, 1:28 am
உதகை மலர் கண்காட்சிக்கு முதல்வர் வருகை? இறுதிகட்டப்பணிகள் தீவிரம்

உதகை மலர் கண்காட்சிக்கு முதல்வர் வருகை? இறுதிகட்டப்பணிகள் தீவிரம்

உதகை, மே 11- கோடைசீசன் துவங்கியுள்ள நிலையில், உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைக்க முதல்வர் ஜோசப் விஜய் வரவுள்ள தாக கூறப்படும் நிலையில், இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்று லாப் பயணிகள் வருகின்றனர்.

கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் சுற் றுலாப் பயணிகள் வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் கண்டு ரசிப் பதற்காக மலர் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான முன்னேற் பாடுகள் தொடங்கப்பட்டு பல் வேறு பணிகள் நடைபெற்று வரு கிறது.

இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இந்த மாதம் விரைவில் நடைபெற உள்ள 128 ஆவது மலர் கண்காட்சிக்காக மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி கடந்த பிப்.16 ஆம் தேதி துவங்கியது.

பின்னர் அவை பூந் தொட்டிகளில் நடப்பட்டு, தற்போது செடிகள் வளர்ந்து பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

மேலும், புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஐய், மலர் கண்காட் சியை துவக்கிவைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மலர் மாடத் தில் பூந்தொட்டிகளை அடுக்குதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், கோடை சீசன் தொடங்கிய நிலை யில், மலர் கண்காட்சிக்காக புல் வெளி மைதானம் சீரமைக்கும் பணி கள் முடிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனு மதி மறுக்கப்பட்டுள்ளது.

பாத்திக ளில் உள்ள மலர் செடிகளில் மலர் கள் பூத்துக் குலுங்குகின்றன. அதே போல் பூந்தொட்டிகளில் இருக்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் வகையில் கண்களை கவருகிறது. பூந்தொட்டிகளை அடுக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர் லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 275 வகையான மலர் விதைகள், இந் தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட விதைகளை கொண்டு 10 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப் பட்டு, பூங்காவில் பல்வேறு பகுதி களில் நடவு செய்யப்பட்டது.

மேலும் மலர் கண்காட்சியின்போது அலங்கார மேடைகளில் காட்சிப்ப டுத்த 50 ஆயிரம் பூந்தொட்டிகள் தயார் நிலையில் உள்ளது.

புதிய அரசு அமைய வேண்டி இருந்ததால், பல்வேறு நிர்வாக முடிவுகள் எடுக்க தாமதம் ஏற்பட் டது.

தற்போது புதிய அரசு பொறுப் பேற்று விட்டதால், மலர் கண் காட்சிக்கான அனைத்து பணிக ளும் தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்த வாரத்தில் மலர் கண் காட்சி தொடங்கப்படும்.

புதிய மலர் அலங்காரங்கள் இடம்பெறும். இந்த ஆண்டு 2 வாரங்கள் மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட் டுள்ளது, என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.