மழைநீர் வடிகால் அமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி
8 Jul 2026, 1:19 am

மழைநீர் வடிகால் அமைப்பை மேம்படுத்த ரூ.200 கோடி

உதகை, ஜூலை 7- உதகையில் பழைய மழைநீர் வடி கால் அமைப்பை மேம்படுத்துவதற் காக ரூ.200 கோடி மதிப்பில் புதிய திட்ட முன்மொழிவு அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளதென மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறினார். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை, கடந்த இரண்டு வாரமாக தீவிரமடைந்துள்ளது.

அவ லாஞ்சி, அப்பர் பவானி ஆகிய நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் மழை அதிக மாக பெய்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது இயல்பான நிகழ்வாகும். கனமழை குறித்து கிடைத்த தகவல் கள் மற்றும் களநிலவர அறிக்கைக ளின் அடிப்படையில், மாணவர்க ளுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப் பட்டது.

அவசர நிலை ஏற்பட்டால் தினமும் காலை 6.30 மணிக்குள் பொதுமக்களுக்கு தகவல் தெரி விக்கப்படும். உதகை நகரில் அடிக் கடி ஏற்படும் குடிநீர் விநியோகப் பிரச் சனைக்கு நிரந்தர தீர்வு காணும் பணி கள் நடைபெற்று வருகின்றன. பார் சன்ஸ் வேலியிலிருந்து வரும் மின் கம்பிகள் இதுவரை தரைக்கு மேல் அமைந்திருந்ததால், மரங்கள் விழு தல் மற்றும் பலத்த காற்று காரண மாக மின்விநியோகம் தடைபட்டு, குடிநீர் விநியோகமும் பாதிக்கப் பட்டு வந்தது.

இப்பிரச்சனையை தீர்க்க வனத் துறையின் அனுமதி பெற்று மின்கம்பி களை பூமிக்கடியில் பதிக்கும் பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன் னும் ஒன்றரை மாதங்களில் நிறை வடையும்.

பணிகள் முடிந்த பிறகு இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் ஏற்படாது. உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கனமழையின் போது மலைப்பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி போக் குவரத்திற்கு சிரமம் ஏற்படுத்துவ தாக புகார்கள் எழுந்துள்ளன. நகரில் உள்ள பழைய மழைநீர் வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி மதிப்பிலான புதிய திட்ட முன்மொழிவு அரசுக்கு அனுப் பப்பட்டுள்ளது. ந

கராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளு டன் இணைந்து மழைநீர் சாலைக ளில் தேங்காமல் வெளியேறும் வகை யில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. குன்னூர் சாலையில் உள்ள நொண்டிமேடு சந்திப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்த இன்டர்லாக் கற்கள் தர மற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள் ளனர். மழைநீர் தேக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக மூன்றாம் தரப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட் டுள்ளது

. தென்மேற்கு பருவம ழையை முன்னிட்டு, கூடலூர் உள் ளிட்ட பகுதிகளில் தேவையெனில் உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் நிவாரண முகாம்கள் ஜூன் முதல் வாரத்திலேயே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் ஆறுகள் மற் றும் ஓடைகளில் நீர்வரத்து அதிக ரிப்பதால், பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் ஆறுகளில் நீந்து வதோ, குளிப்பதோ, விளையாடு வதோ தவிர்க்க வேண்டும்.

இது குறித்து எச்சரிக்கை பலகைகள் மற் றும் பொதுமக்கள் விழிப்புணர்வு அறி விப்புகளும் வைக்கப்படும், என் றார்.