தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகை மலர் அலங்காரம் சில நாட்கள் நீட்டிக்க முடிவு

1 Nov 2026, 1:26 am
உதகை மலர் அலங்காரம்  சில நாட்கள் நீட்டிக்க முடிவு

உதகை மலர் அலங்காரம் சில நாட்கள் நீட்டிக்க முடிவு

உதகை, அக். 31-சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளதால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளால் ஆன அலங்காரங்கள் மேலும் சில நாட்களுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டிக்கு நாள் தோறும் சுற்றுலாப் பயணிகள் வந்துச் சென்ற போதிலும், கோடை காலமான முதல் சீசனிலும், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இரண்டாம் சிசனின் போது, வெளி மாநில மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இரண்டாம் சீசன் ஞாயிறுடன் முடிகிறது. கடந்த இரு மாதங்களில் பள்ளி காலாண்டுவிடுமுறை, ஆயுத பூஜை விடுமுறை என தொடர் விடுமுறை வந்தது.

இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்தனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரயவில் பூங்காவில் 15 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பல்வேறு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் பெய்த மழையால், இந்த தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகள் அழுகியதாலும், சில அழகு தாவரங்கள் அதிகளவில் வளர்ச்சியடைந்ததால், அலங்காரங்கள் காட்சிக்கு உகந்ததாக இல்லை. மேலும், புல் மைதானங்களும் சேறும்சகதியுமாக மாறியது.

எனவே, அலங்காரங்களில் பாதிக்கப்பட்ட தொட்டிகளை அகற்றிவிட்டு, வேறு மலர் தொட்டிகள் கொண்டு மாடங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாடங்களில் உள்ள ஒரு சில தொட்டிகளில் மலர்கள் பாதிக்காமல் உள்ளதாலும், சுற்றுலாப் பயணிகள் வருகை குறையாமல் உள்ளதாலும்,மேலும், சில தினங்களுக்கு இந்த மலர் அலங்காரங்களை வைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் வரை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்கணை கண்டு ரசித்து செல்ல வாய்ப்புள்ளது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.