முந்தய பக்கம்

4 முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

4 Jun 2026, 10:11 pm
4 முக்கிய இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்
<p>உதகை, ஜூன் 4-</p><p>உதகையில் ஆட்சியர் அலுவலகம், மருத்துவக்கல்லூரி உட்பட முக்கிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகம், ஆட்சியர் முகாம் அலுவலகம், புதிய ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி என 4 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. இதுகுறித்து காவல்துறையினக்கு தகவல் தெரிவிக்கபட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாயுடன் வந்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதேபோல, ஆட்சியரின் முகாம் அலுவலகம், பிங்கர்போஸ்ட்டில் உள்ள புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி விடுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. 2 மணி நேர தீவிர சோதனைக்குப்பின் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என தெரியவந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram