மலர் கண்காட்சி இன்று துவக்கம்: தமிழக கலாச்சார மரபுகளுக்கு இடம்!
17 May 2026, 11:07 pm
<p><strong>மலர் கண்காட்சி இன்று துவக்கம்: தமிழக கலாச்சார மரபுகளுக்கு இடம்!</strong></p><p>உதகை, மே 17- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128 ஆவது மலர் கண் காட்சி திங்களன்று (இன்று) துவங் கும் நிலையில், மலர் அலங்காரங் கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், உதகை தாவ ரவியல் பூங்காவில் 128 ஆவது மலர் கண்காட்சி திங்களன்று (இன்று) துவங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 275 ரகங்களை சேர்ந்த 10 லட்சம் மலர் செடி கள் நடவு செய்யப்பட்டன. அந்த செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கு கின்றன. 50 ஆயிரம் பூந்தொட்டி களில் நடவு செய்த பல்வேறு ரக செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட் டுள்ளன. பூங்காவின் கண்ணாடி மாளிகைகளில் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. 30 மலர் அலங்காரங்கள், மலர் கண் காட்சிக்காக மேடை அமைத்தல், அரங்குகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகளை கவர இத்தாலியன் கார்டன் பகுதியில் ஏற்கனவே மலர் களால் அருவி அலங்காரம் ஏற்படுத் தப்பட்டுள்ளது. இதேபோல் கார் னேசன் மலர்களை கொண்டு பல் வேறு அலங்காரங்கள் வடிவமைக் கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் பெபீதா கூறுகை யில், மலர் கண்காட்சியில் தமிழகத் தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரி யத்தை வெளிப்படுத்தும் வகை யில், மலர் அலங்காரங்கள் செய் யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐவகை நிலங்களின் பெருமையை விளக்கும் வகையில் அலங்காரங் கள் செய்யப்படுகிறது. இதேபோல் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அலங்காரம் உட்பட 30க்கும் மேற் பட்ட அலங்காரங்கள் இடம்பெறு கிறது, என்றார்.</p>
