தமிழக உழைக்கும் மக்களின் நலன் காக்க இடதுசாரி அரசியலை வலுவாக கொண்டு செல்வோம்!
17 Jun 2026, 9:48 pm

தமிழக உழைக்கும் மக்களின் நலன் காக்க இடதுசாரி அரசியலை வலுவாக கொண்டு செல்வோம்!

சென்னை, ஜூன் 17 - தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தவும், உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்காக, தொடர் கூட்டு இயக்கங்களை நடத்தவும் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து ‘இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கி ணைப்புக் குழுவை’ உருவாக்கியுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்ட முடிவில், செய்தியாளர்களைச் சந்தித்த இடதுசாரித் தலைவர்கள், இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான பதில் களை அளித்தனர்.

புதிய ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் நோக்கம்!

செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “இந்த ஒருங்கிணைப்புக் குழு தேர்தலுக்கான அணி அல்ல; தேர்தல் கூட்டணி குறித்து அந்தந்த நேரங்களில் முடிவு செய்யப்படும். இந்த ஒருங்கிணைப்புடன் இடதுசாரிக் கட்சிகள் நிரந்தரமாகத் தமிழ கத்தின் நலன், ஏகாதிபத்திய எதிர்ப்பு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்காக இணைந்து களமிறங்கும். வர்க்க, வெகுஜன அமைப்பு களை ஒருங்கிணைக்க ஜூலை 10 அன்று கூட்டு மேடை உருவாக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதத்தில் மாநில அளவிலான பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்” என்றார்.

நாட்டை இடதுபக்கம் திருப்புவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் குறிப்பிடுகை யில், “இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பின்மையைத் திட்டமிட்டுச் சிதைக்கும் பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்டுவதே தற் போதைய முதன்மை நோக்கம். இடதுசாரிக் கட்சிகள் மட்டுமின்றி, ஜனநாயக சக்திகள், இடது குழுக்கள் மற்றும் இடது சிந்தனை யாளர்களைத் திரட்டி, நாட்டை இடதுபக்கம் திருப்புவதற்கான விரிவடைந்த மேடையாக இது செயல்படும். முதலாளித்துவத்திற்கு மாற்றான இடதுசாரி கருத்தியலை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்” எனத் தெரிவித்தார்.

உண்மையான மாற்று இடதுசாரி இயக்கமே!

சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செய லாளர் பழ. ஆசைத்தம்பி பேசுகையில், “தமி ழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அரசியல் நெருக்கடியைச் சந்திந்துள்ளன. தற்போதைய மக்கள் போராட்டங்களுக்கு மாற்று என்பது வலதுசாரி அரசியல் அல்ல; உண்மையான மாற்று இடதுசாரி அரசியல் மட்டுமே. உலகளாவிய இந்த வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்யவே இடதுசாரி களின் ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

‘கூட்டணி இல்லை’ என்ற விமர்சனங்களுக்குப் பதில்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி குறித்த கேள்விக்கு பெ. சண்முகம் பதி லளிக்கையில், “நாங்களெல்லாம் சேர்ந்து இருந்ததற்குப் பெயர்தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் பலவும் வெளி யேறிய பிறகு தற்போதைய சூழலில் அந்தக் கூட்டணி இல்லை. அது இன்னும் இருக்கிறது என்றால் அவர்கள்தான் நிரூபிக்க வேண்டும். எங்களை ஒருமையில் விமர்சித்த வர்களின் சொற்கள் அவர்களின் தகுதியையே வெளிப்படுத்துகிறது” என்றார். மேலும், 5 அதிமுக எம்எல்ஏக்கள் அரசியல் ஆதாயத் திற்காக ராஜினாமா செய்திருப்பது ஏற்புடை யதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் கொள்கைகளும் சவால்களும்

தமிழக அரசின் பொருளாதார வெள்ளை அறிக்கை குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்த தலைவர்கள், புதிய அரசின் அணுகுமுறை ஆளுநர் உரை மற்றும் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகே முழுமையாகத் தெரியும் என்றனர். மேலும், வேளாண் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதில் எவ்வித சமரச மும் இல்லை என்றும், இதற்காக ஒன்றிய அரசு மாநிலத்திற்குத் தர வேண்டிய நிதியை முறையாகத் தர வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். மேலும், சட்டப்பேரவை ஆளுநர் உரை யுடன் தொடங்கும்போது, ஒன்றிய அரசின் சுற்றறிக்கையைப் புறந்தள்ளி, மாநில நடை முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்துடன் அவை யைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பெண்கள் பாதுகாப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் குறித்துப் பேசிய பெ. சண்முகம், “ஒரே நாளில் பல கொடூரச் சம்ப வங்கள் நடப்பது சகிக்க முடியாதது; இதற்கு முக்கியக் காரணம் போதைக்கலாச்சாரம். போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குற்றம் நடந்த பிறகு கட்சி வித்தி யாசம் பார்க்காமல் குற்றவாளிகளைக் கைது செய்து, விரைந்து சட்டப்படியான தண்ட னையைப் பெற்றுத்தர புதிய அரசு பிசிறு இல்லாமல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும்” என்றார்.

காவிரி மற்றும் மேகதாது விவகாரம்

மேகதாது அணைப் பிரச்சனை குறித்துப் பேசிய தலைவர்கள், “காவிரி பாசன உரிமை யில் ஒரு சிறு பாதிப்பு ஏற்படுவதையும் அனுமதிக்க மாட்டோம். கீழ்ப்பகுதி மாநிலங் களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு கட்டு மானத்தையும் மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு தெளிவாகக் கூறியுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தேசத்தின் ஒற்றுமையை உடைக் கும் முயற்சி. எனவே, தமிழக மக்களின் ஒரு மித்த கருத்தை உருவாக்க மாநில அரசு உட னடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டுவதில் ஒன்றிய அரசுக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது” என்று மிக அழுத்தமாகக் குறிப்பிட்டனர்.