தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோசலிசத்தால் மட்டுமே உலக அமைதியை ஏற்படுத்த முடியும்!

7 Mar 2026, 2:36 pm
சோசலிசத்தால் மட்டுமே உலக அமைதியை ஏற்படுத்த முடியும்!
<p><strong>சோசலிசத்தால் மட்டுமே உலக அமைதியை ஏற்படுத்த முடியும்!</strong></p> <p>எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு புதுக்கோட்டை, மார்ச் 7 - உலக அமைதியை ஏகாதிபத்தியத் தால் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. சோசலிச சமூகத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றார் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மறைந்த மூத்த பொதுவுடமை இயக்கத் தலை வர் ஆர்.நல்லகண்ணுவுக்கு புதுக்கோட் டையில் புகழஞ்சலிக் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. &nbsp;இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், &ldquo;கோழிக்குஞ்சை கழுகு தூக்கிச் செல்வ தைப்போல அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுலா அதிபரை தூக்கிச் சென்று &nbsp;சிறையில் அடைத்துள்ளது. இந்தியா வுக்கு விருந்தினராக வந்த ஈரானிய போர்க்கப்பலை அடித்து நொறுக்கி உள்ளது அமெரிக்கா. தன்னுடைய லாப வெறிக்காக சர்வதேச சட்டங்களை காலில் &nbsp;போட்டு மிதித்து யுத்த வெறியை நாளுக்கு &nbsp;நாள் அதிகரித்து வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். உலகம் முழுவதுமே கம்யூனிஸ்டு கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரு கின்றன. ரூ.35 லட்சம் கோடி வரை &nbsp;கடனில் உள்ள அமெரிக்கா, அதில் பெரும் பகுதி தொகையை கம்யூனிஸ்டுகளை யும், புரட்சிகர அமைப்புகளையும் ஒடுக்கு வதற்காகவே பயன்படுத்துகிறது. தோன்றிய காலத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்து வருகிறது கம்யூனிஸ்ட் இயக்கம். உலக அமைதியை ஏகாதிபத்தியத்தால் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது. சோச லிச சமூகத்தில் மட்டுமே அது சாத்தியம். உலக மக்களை மார்க்சிய தத்துவத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும். தோழர் நல்லக்கண்ணு அரசியலில் ஒரு குறியீடு. எளிமை, தியாகம், போராட்ட &nbsp;வலிமை ஆகியவற்றை அரும்பண்பு களாகக் கொண்டு வாழ்ந்தவர். நெல்லை &nbsp;சதிவழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்கு களை சந்தித்தவர். 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக் கொட்டடியின் கொடுமை களை அனுபவித்தவர். வாழ்நாள் முழு வதும் எளிய மக்களின் உரிமைகளுக்காக வும், சாதி ஒழிப்புக்காகவும், சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் களத்தில் நின்று போராடியவர் தோழர் ஆர்.நல்ல கண்ணு. அவர் பின்பற்றிய கொள்கை களை உயர்த்திப் பிடிப்பதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி&rdquo; என்றார். கூட்டத்துக்கு, தமுஎகச கிளைத் தலைவர் க.உஷாநந்தினி தலைமை வகித்தார். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நா. முத்துநிலவன், வாசகர் பேர வைச் செயலர் சா.விஸ்வநாதன், அறிவி யல் இயக்க மாநிலக் குழு உறுப்பினர் அ.மணவாளன் உள்ளிட்டோர் பேசினர். &nbsp;முன்னதாக கிளைச் செயலர் எஸ்.கஸ்தூரி ரெங்கன் வரவேற்க, பழ.அசோக்குமார் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.சங்கர், இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.எஸ்.தனபதி, தமுஎகச மாவட்டச் செய லாளர் ரெ.வெள்ளைச்சாமி, பொருளா ளர் மு.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.