வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம்!
16 Mar 2026, 4:46 pm
<p><strong>வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 5 நாட்கள் மட்டுமே அவகாசம்!</strong></p>
<p>தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி சென்னை, மார்ச் 16 - தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், ஏப்ரல் 23 அன்று ஒரேகட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணை யம் அறிவித்த பின்னணியில், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அளிப்பதற்காக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திங்களன்று சென்னையில் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலுக் கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 துவங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்று இந்திய தலை மைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தாலும், நடைமுறையில் 5 நாட்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி, புனிதவெள்ளி வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30 அன்று துவங்கும் நிலையில், மார்ச் 31 (மகாவீரர் ஜெயந்தி), ஏப்ரல் 3 (புனித வெள்ளிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்கள் பொது விடுமுறை என்பதால், அந்நாட் களில் மனுக்கள் பெறப்பட மாட்டாது; இதனால் மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1, 2, 4, 6 என மொத்தம் 5 நாட்களில் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், ஏப்ரல் 7 அன்று மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் மனுக் களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். மே 4 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறி விக்கப்படும்; மே 6 அன்று ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கைகளும் நிறைவடையும் என்று கூறி யுள்ளார். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் தேர்தல் பிரச்சாரத்தைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்; பிரச்சார அனுமதியை தேர்தல் ஆணைய இணையதளம் மூலமே பெற வேண்டும்; 5 ஆயிரம் பேருக்கு மேல் கூடும் கூட்டமெனில் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர் களுக்காக நிழற்குடைகள், குடிநீர் மற்றும் தடை யற்ற மின்சார வசதிகள் உறுதி செய்யப்படும். வாக்குச் சாவடிக்குள் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கு வாக்குச் சாவடிகளின் வெளியே பெட்டக வசதி செய்யப்படும் என்று கூறிய தலை மைத் தேர்தல் அதிகாரி, புகார்களைத் தெரிவிக்க ‘C-Vigil’ செயலி தயார் நிலையில் உள்ளது; வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் வார்டு விவ ரங்களை இப்போதே சரிபார்த்துக் கொள்ளுமா றும் அர்ச்சனா பட்நாயக் கேட்டுக் கொண்டார். 2,106 பறக்கும் படைகள் அமைப்பு தேர்தலை நியாயமான முறையில் நடத்தவும் முறைகேடுகளை தடுக்கவும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருமான வரித் துறை உள்ளிட்ட 23 அமலாக்க முகமைகள் கண்காணிப்புப் பணியில் இணைந்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் தீவிரமாகக் கண் காணிக்கப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 1.26 கோடி ரூபாய் மதிப்பி லான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3.2 லட்சம் அரசு அலு வலர்கள் மற்றும் 50 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர்.</p>
<p> </p>
