தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் ஆதிக்கத்தால் வணிகர்கள் பாதிப்பு

24 Jun 2026, 10:57 pm
ஆன்லைன் ஆதிக்கத்தால் வணிகர்கள் பாதிப்பு
<p><strong>ஆன்லைன் ஆதிக்கத்தால் வணிகர்கள் பாதிப்பு</strong></p><p>​​​​​​​பெரம்பலூர், ஜூன் 24 - பெரம்பலூரில் நடைபெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வணிகர்கள் பல்வேறு பிரச்ச னைகளை எதிர்கொண்டுள்ளோம். புதிய அரசின் நடவடிக்கைகள் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியி லும், வணிகர்கள் மத்தியிலும் இருக்கிறது. கார்ப்பரேட் கம்பெனிகளுடைய ஆதிக்கம், ஆன்லைன் வர்த்தக நிறு வனங்களின் ஆதிக்கம் கட்டுக்குள் அடங்காமல் சென்று கொண்டிருக் கின்றன. இதனால், சிறு வணிகர் களின் வியாபாரம் கொஞ்சம் கொஞ்ச மாக அழிந்து கொண்டு வருகிறது. தனி ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரி மட்டும் இங்கே கால் பதித்து, பல லட்சம் வியாபாரி களுடைய வாழ்க்கையைச் சூறை யாடிக் கொண்டிருக்கிறார். இதனால் தமிழக முதல்வரை இந்த வாரத்தில் சந்தித்து கடந்த மே 5 அன்று நடந்த மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட சிறப்பு தீர்மானங்களான 11 கோரிக் கைகளை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்த உள்ளோம். மின்சாரக் கட்டண உயர்வு என்பது வியாபாரிகளுக்குப் பல அடுக்கு முறையிலே அமைந்திருக் கிறது. அதையெல்லாம் சீர்படுத்த வேண்டும். இப்போது சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று மாதத்திற்கு டோல் ஃப்ரீ செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் இந்த விலை ஏற்றத்திற்கும் அதையும் சமம் செய்யும்பொழுது, மக்களுக்கு விலையை ஏற்றாம லேயே சாமானிய மக்களை பாது காக்கக் கூடிய சூழலும் ஏற்படும். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சில மாவட்டங்களில் தன்னிச்சையாகச் செயல்படுகின்ற னர். அதிகாரிகள் ஆய்வு செய்வ தற்காக எடுத்துச் செல்லும் பொருட் களுக்கும், அவர்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போதும் பணம் தருவதில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தால் அந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த வணிகர் மீது புகார் தருவேன் என கூறுகின்றனர். அரசுத் துறை அதிகாரி களுடைய அத்துமீறல் என்பது மிகக் கடுமையாக இருக்கிறது. இதி லிருந்து எங்களை மீட்க வேண்டும் என்பது குறித்தும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். இவ்வாறு விக்கிரம ராஜா கூறி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.