தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

27 குடும்பங்களுக்கு மாற்று இடத்துடன் ஆன்லைன் பட்டா

4 Dec 2025, 3:52 pm
27 குடும்பங்களுக்கு மாற்று இடத்துடன் ஆன்லைன் பட்டா
<p><strong>27 குடும்பங்களுக்கு மாற்று இடத்துடன் ஆன்லைன் பட்டா</strong></p> <p>சிதம்பரம், டிச. 4- &nbsp;சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 33வது வார்டு இந்திரா நகர் விளாந்திர மேடு பகுதியில் உள்ள முத்தையா வாய்க்கால் கரையில் சுமார் 50 ஆண்டுகளாக 27 குடும்பங்கள் வசித்து வந்தனர். இது நீர்வழி ஆக்கிரமிப்பு எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் வருவாய்த் துறையினரும் பொதுப்பணித் துறையினரும் வீடுகளை அகற்ற முயன்றபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் பணியைத் தடுத்து நிறுத்தினர். பின்னர், மாற்று இடம் வழங்கிய பிறகே வீடுகளை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாற்று இடம் வழங்கிய பிறகே வீடுகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார், உதவி ஆட்சியர் கிஷன்குமார், மற்றும் சிதம்பரம் வட்டாட்சியர் கீதா ஆகியோரின் முயற்சியால், பாதிக்கப்பட்ட 27 பேருக்கும் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட பெரிய குமட்டி என்ற இடத்தில் வீட்டு மனைகளாக ஆன்லைன் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியர் கீதா 27 பயனாளிகளுக்கும் பட்டாக்களை வழங்கினார். நீர்வளத்துறை வீடுகளைக் காலி செய்ய நோட்டீஸ் வழங்குவார்கள், அதன் அடிப்படையில் உடனடியாக வீடுகளைக் காலி செய்து தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் நாகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.