தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்தகங்கள் அடைப்பு

21 May 2026, 1:33 am
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு:  மருந்தகங்கள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்தகங்கள் அடைப்பு

கள்ளக்குறிச்சி, மே 20– ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாகக் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து மருந்தகங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

இப்போராட்டத்தின் காரணமாக, அவசர மருந்துகள் தேவைப்படும் நோயாளிகளும் பொதுமக்களும் மருந்துகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஆன்லைன் மூலம் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் கட்டுப்பாடின்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதோடு போதை மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளதாக வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே ஆன்லைன் மருந்து விற்பனைக்கு முழு தடை விதிக்க வேண்டும், தகுதியற்ற நபர்களுக்கு மருந்து விற்பனை உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும், அத்தியாவசிய மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் மற்றும் சந்தையில் புழங்கும் போலி மருந்துகளை முற்றிலும் ஒழிக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இப்போராட்டத்தில் வணிகர்கள் வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் சங்கராபுரம் கிளை நிர்வாகிகள் கூறுகையில், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் உடல்நலனும் கேள்விக்குறியாகிறது என்று கவலை தெரிவித்தனர்.

மருந்து என்பது சாதாரண வணிகப் பொருள் அல்ல என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி தகுதி வாய்ந்த மருந்தாளுநர்கள் மூலமாக மட்டுமே அது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகச் செவிசாய்த்துத் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த கட்டமாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என்றும் மருந்து

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.