தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆன்லைனில் பட்டாசு வழங்க மக்கள் ஆர்வம்

6 Nov 2026, 1:14 am
ஆன்லைனில் பட்டாசு வழங்க மக்கள் ஆர்வம்

ஆன்லைனில் பட்டாசு வழங்க மக்கள் ஆர்வம்

சிறப்பு விற்பனை பாதிப்பு

நாமக்கல், நவ.5–தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால், உள்ளூர் சிறப்பு பட்டாசு கடைகளின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகளுக்கு அடுத்தபடியாக பட்டாசு விற்பனை முக்கியத்துவம் பெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் வியாபாரிகள் தற்காலிககடைகள் அமைத்து பட்டாசுகளை விற்பனைசெய்வது வழக்கம். இந்நிலையில், கடந்த ஆண்டை விட பட்டாசுகளின் விலை அதிகரித்துள்ளதால், குறைந்த விலையில் பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் ஆன்லைன் விற்பனை மற்றும் நேரடி கொள்முதலை நாடி வருகின்றனர். இதனால் உள்ளூர் பட்டாசு கடைகளின் வழக்கமான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு–நாமக்கல் சாலையில் ஆண்டுதோறும் சிறப்பு பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்து வரும் தங்கராசுஎன்பவர் கூறியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்து பெற்றோர் குழந்தைகளுடன் வந்து அதிகளவில் பட்டாசுகளை வாங்கிச் செல்வார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும், சிலர் சிவகாசியில் உள்ள விற்பனையாளர்களிடம் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, தங்களுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக வாங்குகின்றனர். ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக உற்பத்தி இடத்திற்கே சென்று வாங்கினாலும் விலை ஓரளவு குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த ஆண்டு எனக்கு தெரிந்த அளவில்60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன்மூலமாகவும், நேரடியாக சிவகாசி சென்றும் பட்டாசுகளை வாங்கி வந்துள்ளனர். இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டு வியாபாரம் இல்லை. இனிவரும் காலங்களில் சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் என்னை போன்ற சிறு வியாபாரிகளுக்கு இந்ததொழிலில் பெரிய அளவில் வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.