"ஒரே நாடு ஒரே தேர்தல்: நோயை விடக் கொடியது!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
9 Mar 2026, 8:15 am

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தீர்வு, ஒரு நோயை விட கொடியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தீர்வு, ஒரு நோயை விட கொடியது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையையே தலைகீழாக மாற்றும். இதன்மூலம் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டு, இந்தியாவில் மெல்ல மெல்ல வல்லாதிக்க அதிபர் ஆட்சி முறையை (quasi-presidential model) அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது.

இது கூட்டாட்சிக்கு எதிரான வகையில் மாநிலங்களின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் செயலாகும். நிர்வாக வசதிக்காக அரசியலமைப்புச் சமநிலையையும், மக்களின் உரிமைகளையும் பலி கொடுக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.