தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

25 Feb 2026, 3:22 pm
சென்னை விரைவு செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மாமல்லபுரம், பிப். 25-  செங்கல்பட்டு மாவட்டம், மலாலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (17).  இவர், மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு கிராமப்பகுதி யில் உள்ள தனியார் விடுதியில் மின்சாதனப் பணிகளில் ஈடு பட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பிரவீன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரு டன் இருந்த மற்றொரு நபர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டுச் செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த நபரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித் தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் இருவர் பலி

திருக்கழுக்குன்றம், பிப். 25-  செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த புல்லேரி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (36)  மற்றும் முடையூர் கிரா மத்தைச் சேர்ந்த முத்து (32) ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராகப் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், புதனன்று  (பிப். 25) காலை பணிக்குச் செல்வதற்காகத் திருக்கழுக் குன்றத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் செங்கல் பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கீரப்பாக்கம் பகு தியில் எதிரே வந்த அடை யாளம் தெரியாத வாகனம் மோதியதில் மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருக்கழுக் குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக் காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் 14 வயது சிறுமிகளுக்கு  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பேட்டி

புதுச்சேரி, பிப். 25-  14 வயது சிறுமிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க எச்.பி.வி (எச்பிவி) தடுப்பூசி பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் இலவசமாகச் செலுத்தப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செவ்வேல் கூறியுள்ளார். புதுச்சேரியில் புதன்கிழமை (பிப். 25) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவில் பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாவது முன்னணி புற்றுநோயாகும். 99.7 விழுக்காடு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மனித எச்.பி.வி வைரஸால் ஏற்படுகிறது. இந்த புற்று நோயை எச்.பி.வி தடுப்பூசி மூலம் முழுமை யாகத் தடுக்கலாம்.  14 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமி களுக்கு எச்.பி.வி தடுப்பூசி திட்டம் செயல் ்படுத்தப்படும். இந்தத் தடுப்பூசி ரூ. 4,000 விலையுள்ளது. தனியாரிடம் கிடைப்பது மிகக் குறைவு, அதாவது ஒரு விழுக்காடு மட்டுமே கிடைக்கும். மத்திய அரசு இந்தத் தடுப்பூசியைத் தகுதியுள்ள அனை வருக்கும் இலவசமாக வழங்க உள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 14,000 சிறுமிகளுக்கு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் மூலம் இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும். வரும்  பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் 3 மாதத்திற்குத் தினந்தோறும் வேலை நாட்களில் காலை  9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுமி களுக்குச் செலுத்தப்படும். அதன்பிறகு தடுப்பூசி திட்டங்களில் வியாழக்கிழமை களில் வாரம் ஒரு நாள் செலுத்தப்படும். பெற்றோரின் முழு ஒப்புதல் பெற்ற பிறகே சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பக்கவிளைவு இல்லை, இது பாதுகாப்பா னது.  இவ்வாறு அவர் கூறினார். செய்தி யாளர் சந்திப்பின் போது மாநில சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கோவிந்த ராஜன், துணை இயக்குநர்கள் ரகுநாதன், உமாசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தீவிர சிகிச்சையில் ஏஐ பயன்பாடு குறித்து ஆராயும் நிகழ்வு'

சென்னை, பிப். 25-  சென்னையில் நடைபெற்ற ஐஎஸ்சி சிஎம்-இன் 32-வது ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக, தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை நுண்ணறி வின் ஏஐ பங்களிப்பை ஆராயும் ‘ஏஐ டேட்டாதான் 2026’ (AI Datathon 2026) நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. காவேரி மருத்துவமனைகள் மற்றும் ஐஐடி சென்னை இணைந்து நடத்திய இவ்விழாவில், உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்கள் பங்கேற்றனர். செப்சிஸ், சுவாசக் கோளாறு போன்ற அவசர காலங்களில், நோயாளி களின் தரவுகளைக் கொண்டு துல்லிய மான மருத்துவ முடிவுகளை எடுக்க உதவும் புதிய தொழில்நுட்ப மாதிரி களைப் பங்கேற்பாளர்கள் உருவாக்கி னர். “சுயநினைவற்ற நிலையில் உள்ள  அவசர சிகிச்சை பிரிவு நோயாளி களின் தரவுகளைக் கொண்டு நோயை முன்கூட்டியே கணிக்கப் பொறியாளர் களும் மருத்துவர்களும் இணைந்து செயல்படுவது அவசியம்” என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி வலியுறுத்தினார். நவீனத் தொழில்நுட் பம் மூலம் உயிர்காக்கும் சிகிச்சையை மேம்படுத்துவதே இந்த முன்னெடுப் பின் நோக்கமாகும் என்று காவேரி மருத்துவமனையின் செயல் இயக்கு நர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறி னார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னை,பிப்,25- தங்கம் விலை உயர்ந்துள்ளது. புதன் கிழமை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு  கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையானது.கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும், செவ்வாயன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120- க்கு விற்பனையானது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.