தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

13 Feb 2026, 3:55 pm
சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
<p><strong>சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு</strong></p> <p>சேலம், பிப். 13- சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே தமிழக &nbsp;வெற்றி கழகம் சார்பில் பரப்புரை கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்கு பிறகு மிக எச்சரிக் கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண் டனர். இருந்த போதும், பொதுக்கூட்டம் நடந்த இடம் வெட்ட வெளி என்பதும், வெயில் சுட்டெரித்த நிலையில், ஒதுங்க நிழல்தரும் மரங்கள், பந்தல் உள்ளிட்டவை இல்லாததால், காலையில் இருந்தே கூடிய கூட்டம் மூன்று மணி நேரத்திற் கும் மேலாக காத்திருந்த நிலையில் வெயிலின் வெப்பத்தை &nbsp;தாங்க முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். ஒரு சிலர் மயக்கமடைந்தனர். &nbsp;இதனிடையே, சேலம் சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சூரஜ் (37). மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த &nbsp;இவர் கடந்த 20 ஆண்டுகளாக சேலத்தில் வெள்ளிப் பட்டறை யில் பணியாற்றி வருகிறார். இவர், தனது நண்பருடன் விஜய்யை பார்க்க வேண்டும் என வந்துள்ளார். நீண்ட &nbsp;நேரம் வெட்டவெளியில் காத்திருந்த சூரஜ் மயக்கமுற்றார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி உயிரி ழந்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப் பட்ட நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரின் நண்பர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. &nbsp;இதனிடையே, தவெக கூட்டம் நடைபெற்ற அதே மை தானத்தின் அருகே அடையாளம் தெரியாத மற்றொருவரின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த மரணங்கள் தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை தவெக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.