தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நிகழ்வுகள் அதிரடியாக ரத்து சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய பாஜக அரசு!

4 Nov 2026, 11:12 pm
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நிகழ்வுகள் அதிரடியாக ரத்து  சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பால்  பின்வாங்கியது ஒன்றிய பாஜக அரசு!

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நிகழ்வுகள் அதிரடியாக ரத்து சு. வெங்கடேசன் எம்.பி. எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய பாஜக அரசு!

மதுரை, நவ. 4 -சு. வெங்கடேசன் எம்.பி.யின் எதிர்ப்பைத் தொடர்ந்து,‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான கல்லூரி நிகழ்வுகளை, ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளது.

ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மை பாரத்’ (MY Bharat) அமைப்பின் சார்பில், நாடுமுழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ‘விக்சித் பாரத் இளைஞர் நாடாளுமன்றம்’ (Youth Parliament) என்ற பெயரில்,

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பில் நிகழ்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்தி ருந்தார்.

இதுதொடர்பாக ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், மக்களவைத் தலைவர், நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர் ஆகிய மூவருக்கும் அவர் கடிதம் எழுதினார்.

“‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான சட்ட முன்வடிவு நாடாளு மன்றத்தின் இரு அவைகளாலும் முறைப்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் (JPC) தீவிரப் பரிசீலனையிலும் சட்டப்பூர்வ ஆய்விலும் உள்ள நிலையில் -நாடாளு

மன்றத்தில் இறுதி செய்யப்படாத ஒரு விவகாரத்தில், ஒரு நிர்வாக அமைச்சகமே நேரடியாகத் தலையிட்டு நாடு முழுவதும் இளைஞர் நாடாளுமன்றங்களை நடத்துவது நாடாளுமன்ற மரபுகளுக்கும், கூட்டுக்குழுவின் சுயேச்சை யான அதிகாரவரம்புக்கும் முற்றிலும் எதிரானது!” என்று தெரிவித்து, இதுதொடர்பான இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதனடிப்படையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற (Youth Parliament) நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.