தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடல் ஜி.ராமகிருஷ்ணன் வேதனை!

28 Oct 2026, 10:01 pm
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடல் ஜி.ராமகிருஷ்ணன் வேதனை!

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடல்

ஜி.ராமகிருஷ்ணன் வேதனை!

சென்னை, அக். 28 –அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்கவும், தாய்மொழி வழிக் கல்விக்குப் புத்துயிர் அளிக்கவும் கோரித் தமிழ்நாடு-புதுச்சேரி பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் சார்பில்புதனன்று (அக். 28) மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் சென்னையில் தொடங்கியது.

இவ்வியக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கவலை தரும் சூழலும் இயக்கத்தின் தொடக்கமும்தமிழ்நாட்டில் 246 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், 60 சதவீத அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 30-க்கும் குறைவாகவே உள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அக். 31 முதல் அனைத்து மாவட்டங்களிலும், நவம்பர் 1 கிராம சபைக் கூட்டங்களிலும் 20 லட்சம் கையெழுத்துகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து 2027 ஜனவரி 21 முதல் 30 வரை மக்கள் சந்திப்பு கலை நடைபயணம் நடத்தப்பட்டு, ஜனவரி31 அன்றுதிருச்சியில் கல்வி மாநாடு நடத்தி அறிக்கையாக வெளியிட்டு, கல்வி அமைச்சரிடம் வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

தலைவர்கள் உரைநிகழ்ச்சியில் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், “கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. அரசுப்பள்ளிகளை மூடுவதால் பட்டியல், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகக் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது ஏழை குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்” என்றார்.

மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில், “அரசுப் பள்ளிகளை அழித்துத் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதே அரசுகளின் கொள்கையாக உள்ளது. அரசுப் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் பலப்படுத்த மக்கள் ஒன்றுபட வேண்டும்” என்றார்.

பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் மயிலை பாலு, மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன், பேராசிரியர் இரா. காளீஸ்வரன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், பதிப்பாளர் ரத்தின விஜயன், சமூகக் கல்விநிறுவன இயக்குநர் ஷியாம் சுந்தர், சமூக செயற்பாட்டாளர் பாரதி கண்ணன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.