திருச்சி விரைவு செய்திகள்
28 Nov 2025, 2:28 pm

லாரி மோதி ஒருவர் பலி

ராஜபாளையம், நவ.28- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வேட்டை பெருமாள் கோயில் அருகே தனது சகோதரியின் வீட்டில் தனது அம்மா ருக்மணி யுடன் தங்கி இருந்தவர் நரசிம்மன் (48) .இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராஜ பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது அம்மா ருக்மணி க்கு உதவியாக தனது சகோதரி வரலட்சுமி யுடன் இருந்துள்ளார். இரவு 9 மணியளவில் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி மருத்துவமனைக்கு வர சாலையை கடக்க முயன்ற போது ராஜபாளையத்தில் இருந்து தென்காசி ரோட்டில் வந்த லாரி மோதி முன் சக்கரம் ஏறியதில் நரசிம்மன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மபுரி மாவட்டம் பெரிய தோப்பு கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் அய்யாக்கண்ணு கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

புனித சவேரியார் ஆலய கொடியேற்று விழா

விருதுநகர், நவ.,28- விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம் தலைமை யில் அருட்பணியாளர்கள் லாரன்ஸ், மரிய ஜான் பிராங்க்ளின் ஆகி யோர் முன்னிலையில் சிவகங்கை அமைதி இல்ல அருண்பணியாளர் தாமஸ் கொடியினை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து நவநாள் திருப் பலி, மறையுரை நடைபெற்றது. இத்திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. நிறைவு நாளான டிசம்பர் 6 இல் தேர் பவணி நடைபெறுகிறது.