ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி
26 Sept 2026, 1:20 am
<p><strong>ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி</strong></p><p>தருமபுரி, செப்.25-அரசு கலைக்கல்லூரிகள் சார்பில், அரூரில் ஒரு கோடிபனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை பாதுகாக்கவும், நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தவும் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நடும் பணியினை தமிழக அரசுதொடங்கியுள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைந்து, நாட்டு நலப்பணித் திட்டம்சார்பில் அரூர் அருகே செல்லம்பட்டி ஊராட்சி காவாப்பட்டி பெரிய ஏரியில் பனை விதைகள் நடும் பணி வெள்ளியன்றுநடைபெற்றது. அரூர் வருவாய் கோட்டாட்சியர் சி.செம்மலை தலைமை வகித்து, பனை விதைகளை நடும் பணியை துவக்கி வைத்தார். தொடங்கி வைத்தார். இதில்பல்வேறு தன்னார்வ அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஏரிக்கரை, வரப்பு மற்றும் புறம்போக்கு நிலங்களில் பனை விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கே.கோபிநாத், டி.அருண்குமார், தனியார் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.</p>
