பார் தகராறில் ஒருவர் கைது
10 Apr 2026, 5:30 am

பார் தகராறில் ஒருவர் கைது

இராமநாதபுரம், ஏப்.9- விருதுநகர் மாவட்டம் இராமநாதபுரம் அருகே இளந்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ள பாரில் இரவு முழுவதும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் உட்பட சிலர் பாருக்குச் சென்று மது கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பாரில் மது விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்த மலர் மன்னன் கூடுதல் பணம் கேட்டதாக தெரிகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு முத்துக்குமார் மீது மலர் மன்னன் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த முத்துக்குமார், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தாளம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மலர் மன்னனை கைது செய்து காவலில் வைத்தனர். மேலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க கீழத் தெருவிலும், தெற்குத் தெருவிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.