கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
4 Dec 2025, 3:52 pm

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஒருவர் கைது

கோவை, டிச.4- ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை இளைஞரிடம் ரூ.3.5 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த ஜேம்ஸ். இவ ருக்கு வாட்ஸ்அப் மூலம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னசெட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அருண், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் மேனேஜ்மென்ட் பதவிக்கு வேலை காலியாக உள்ளதாகவும், அதை உறுதி செய்து தரு வதாகவும் கூறினார். விசா, டிக்கெட், ஆவணங்கள் தயா ரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்காக மொத்தம் ரூ.3.50 லட்சம் தேவை என்று தெரிவித்தார். இதனை நம்பிய ஜேம்ஸ், பல தவணைகளாக அருண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக ளுக்கு ரூ.3.5 லட்சம் செலுத்தினார். அதன் பின்னர் வேலை கிடைக்கவில்லை; பணத்தையும் அருண் திருப்பித் தர வில்லை. தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றபோது அருண் போனை எடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜேம்ஸின் தந்தை டேனியல் ஆபிரகாம், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அருணைக் கண்டுபிடித்து வியாழனன்று கைது செய்தனர். கைதான அருண் மீது ஈரோடு, சேலம், திருச்சி உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதே போன்ற வெளி நாட்டு வேலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள தாக போலீசார் தெரிவித்தனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து வாட்ஸ்அப், டெலி கிராம் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக வரும் செய்தி களை நம்பி பணம் செலுத்துவதால் தொடர்ந்து மோசடி கள் அதிகரித்து வருகிறது. இது போன்ற சந்தேகத்திற் கிடமான செய்திகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்குமாறும் கோவை மாநகர போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர்.

வரலாற்றை திரித்திட கருத்தரங்கமா முற்போக்கு இயக்கங்கள் மனு

கோவை, டிச.4- வரலாற்றை திரித்து எழுதும் இந்துத்துவ முயற்சிக்கு ஊக்கம் தரும்விதமாக “சிந்து-சரஸ்வதி நாகரிகம்” என்ற பெய ரில் நடைபெறவுள்ள வரலாற்றுக் கருத்தரங்குக்கு தடை விதிக்க வேண்டும் என முற்போக்கு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கோவை கவுண் டம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி இணைந்து கல்லூரியில் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் “சிந்து-சரஸ்வதி நாகரிகம்” என்ற பெயரில் வர லாற்றுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. உலகளாவிய தொல்லியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள் ளப்பட்ட “சிந்து சமவெளி நாகரிகம்” (Indus Valley Civilisation) என்ற பெயரை மறைத்து, வரலாற்றைத் திரித்து “சிந்து-சரஸ்வதி நாகரிகம்” என்று பெயர் சூட்ட முயல் கின்றனர். இதனை தடுக்க வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “சிந்து சமவெளி நாகரி கத்தை 1921-22 இல் ஜான் மார்ஷல், தயாராம் சாஹ்னி, ஆர்.டி. பானர்ஜி உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்து உல கறியச் செய்தனர். கடந்த நூறு ஆண்டுகளாக உலகளா விய அறிஞர்களாலும், இந்திய தொல்லியல் துறையாலும் ‘சிந்து சமவெளி நாகரிகம்’ என்றே அழைக்கப்பட்டு வருகி றது. தற்போது அதனை மறைத்து ‘சிந்து-சரஸ்வதி நாகரி கம்’ என்று பெயர் மாற்றி நிகழ்ச்சி நடத்துவது வரலாற்றைத் திரிப்பதாகும். எனவே இந்தக் கருத்தரங்குக்கு உடனடித் தடை விதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு அளிக்கையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி உள்ளிட்ட முற்போக்கு அமைப்பு களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மூதாட்டியை தாக்கிய முன்னாள் அதிமுக எம்.பி

சேலம், டிச 04- முன்னாள் அதிமுக நாடாளு மன்ற உறுப்பினர் சாலை அமைப் பது தொடர்பாக பொதுமக்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துடன் பெண்ணை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் காமனேரி பகுதியில் இருந்து சின்ன திருப்பதி வரும் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜு னனின் நிலம் இருக்கும் பகுதி சாலை விரிவாக்கம் செய்யாமல் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்ய சாலைப்பணியில் ஈடுபடுப வரிடம் தெரிவித்ததாக கூறப்படு கிறது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடியி ருப்பு உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கேட்ட நிலையில் அப்போது அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்பி., அர்ஜுனன் திடீரென அருகே இருந்த மூதாட்டியை தாக் கினார். இது அங்கிருந்தவர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியது. இந்த வீடியோ தற் போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.