ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
6 hours before

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரிய மைக்கேல் தெரிவித்துள்ளார்.

சம்பல்பூர்–எர்ணாகுளம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08311) ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 2 வரை புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு சம்பல்பூரில் இருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு சேலம், இரவு 9.15 மணிக்கு ஈரோடு, இரவு 10 மணிக்கு திருப்பூர் மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு போத்தனூர் நிலையங்களை வந்தடையும்.

எர்ணாகுளம்–சம்பல்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08312) ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 8.40 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் சென்றடையும். இந்த ரயில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு போத்தனூர், 1.55 மணிக்கு திருப்பூர், 2.50 மணிக்கு ஈரோடு, மாலை 3.55 மணிக்கு சேலம் நிலையங்களை வந்தடையும்.

இந்த ரயில்களில் முதல் வகுப்பு ஏசி, இரண்டடுக்கு மற்றும் மூன்றடுக்கு ஏசி, படுக்கை வசதி, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பர்கர் ரோடு, ராயகடா, விஜயநகரம், துவ்வாடா, ராஜமுந்திரி, விஜயவாடா, நெல்லூர், பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.