சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 166வது பிறந்த நாளான புதனன்று
18 Feb 2026, 3:04 pm
<p>சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 166வது பிறந்த நாளான புதனன்று (பிப்.18) சேப்பாக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கம் இதை நடத்தியது. சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைவர் க.பீமாராவ், சிஐடியு மத்தியசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆர்.கபாலி, சீனிவாசன், சி.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
