ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம்
1 Jan 2026, 4:52 pm
<p>ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். குடும்பம் குடும்பமாக வந்த மக்கள், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பொழுதை கழித்ததோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ந்தனர். இங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.</p>
