தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 28ஆம் ஆண்டு நினைவு நாள் பாஜக அதிமுகவை தோற்கடிக்க சபதமேற்போம்!
16 Mar 2026, 4:46 pm
<p><strong>தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 28ஆம் ஆண்டு நினைவு நாள் பாஜக அதிமுகவை தோற்கடிக்க சபதமேற்போம்!</strong></p>
<p>திருப்பூர் கேத்தம்பாளையம் ஆர்.பன்னீர்செல்வம் கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி படுகொலை செய்யப்பட் டார். சிஐடியு சங்கத்தின் அப் பகுதி தலைவராகவும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட பன்னீர்செல்வம், தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டி உரிமைக் குரல் கொடுத்தார் என்பதால் ஜீனா கார்மெண்ட்ஸ் நிர்வாகம் கூலிப்படையை ஏவி பன்னீர்செல்வத்தைப் படுகொலை செய்தது. பன்னீர்செல்வம் படுகொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய கோவை தொகுதி எம்.பி. (தற்போதைய துணை குடியரசுத் தலைவர்) சி.பி.ராதா கிருஷ்ணன் முன்னிலையில் விழா நடத்தி பாரதிய ஜனதா கட்சியில் சேர்த்துக் கொண் டனர் என்பது வரலாறு. தொழிலாளி வர்க்க நலனுக்கு விரோதமான கட்சி பாஜக என் பது மட்டுமல்ல, தொழிலாளியை கொலை செய்த கிரிமினல்களை பகிரங்கமாக கட்சியில் சேர்த்து கொள்ளக்கூடிய பாசிசப் போக்கை 28 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை, தொழிற்சங்க கூட்டுப்பேர உரி மைக்கு எதிரானது பாரதிய ஜனதா கட்சி. மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளில் தொழிலாளர் விரோதப் போக்கை கண் மூடித்தனமாக பின்பற்றியது. எனவே தான் இந்திய விடுதலைப் போராட்டத் துடன் பின்னிப்பிணைந்த தியாக வரலாறு, போராட்டப் பாரம்பரியத்தின் மூலம் பெறப் பட்ட தொழிலாளர் உரிமை சட்டங்களைப் பறித்து 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அதை நாடு முழுவதும் அமலாக்கத் துணிந்துள்ளனர். தற்போது ஈரானுக்கு எதிராக இஸ் ரேல், அமெரிக்கா துவக்கிய அநீதியான போரில் அவர்களை எதிர்க்கத் துணிவில்லாமல், பாஜக அரசு பாசாங்குத்தனமாக நடந்து கொள்கிறது. ஏகாதிபத்தியம் நடத்தும் எல்லா போர்களும் கடைசியில் அந்தந்த நாட்டு உழைக்கும் மக்களின் நலன்க ளுக்கு எதிரானதாகும். உழைக் கும் மக்கள் தலையில் சுமையைக் கூட்டி, அவர்களது ஜனநாயக உரிமையை பறிப்பதாக உள் ளது. மோடி அரசு இந்தியாவில் அம்பானி, அதானி ஆகிய கார்ப்ரேட் நண்பர்களின் லாபத்திற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியத் துடன் சமரசம் செய்து கொள்கிறது. இது இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிரான தாகும். எனவே உழைக்கும் மக்கள் நல னுக்கு நேர் எதிரான பாரதிய ஜனதா கட்சியை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ள வேண்டும். சீர்குலைவு சக்தி யான பாஜகவுடன், அதிமுக கூட்டு சேர்ந்து வருகிறது. இது தமிழ்நாட்டிற்கும், உழைக்கும் மக்களுக்கும் எதிரான கூட்டணியாகும். குறிப்பாக திருப்பூர் பின்ன லாடைத் தொழிலாளர்களுக்கு நிட்டிங் குறைந்தபட்ச கூலி சட்டம் உருவாக்குவ தற்கு 2016 – 2021 அதிமுக ஆட்சிக் காலத் தில் சட்டவிரோதமாக கொள்ளைப்புற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப் போது திருப்பூர் வடக்குத் தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் ஆகியோர் தொழி லாளர்களுக்கு துரோகம் இழைக்கும் நிட்டிங் குறைந்தபட்ச கூலிச் சட்டம் ஏற் படுவதற்கு உடந்தையாக செயல்பட்ட னர். தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்த லில் பாஜகவும், அதிமுகவும் கைகோர்த்து வருகின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் விரோதியான பாஜகவும், துரோகம் இழைத்த அதிமுகவும் தோற் கடிக்கப்பட வேண்டும். இதுவே தியாகி ஆர்.பன்னீர்செல்வம் 28ஆம் ஆண்டு நினைவுநாளில் நாம் உறுதியேற்கும் சப தமாகும்.</p>
