ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை
3 Oct 2026, 12:59 am
<p><strong>ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தீவிர வாகனத் தணிக்கை</strong></p><p>சென்னை, அக்.2-பண்டிகைக் காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத்துறை அமைச்சரின் உத்தரவு மற்றும் போக்குவரத்து ஆணையரின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.</p><p>இதன் ஒரு பகுதியாக வியாழனன்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 2,247 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபட்ட 664 பேருந்துகளுக்கு இ-சலான் வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரி செலுத்தாத மற்றும் தகுதிச்சான்று இல்லாத 8 பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதிக கட்டணம் வசூலித்த 11 பேருந்துகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை பயணிகளிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.60,54,786 வசூலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன்கருதி இந்தச் சிறப்பு வாகனத் தணிக்கை வருகிற அக்டோபர் 21ஆம் தேதி வரை தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் எனவும், விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை 1800 425 6151 மற்றும் 9384808333 என்ற எண்கள் மூலமாகவும் அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் தெரிவிக்கலாம்.</p>
