ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு
6 Nov 2026, 12:46 am

ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு

கோவை, நவ.5-தீபாவளியை முன்னிட்டு, கோவையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் பல மடங்குஉயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி விடுமுறையை கொண்டாடுவதற்காக கோவையில் தங்கி பணியாற்றி வரும் பிறமாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்களில் இடநெருக்கடி மற்றும் அரசுபேருந்துகளில் நிலவும் கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக பலரும்தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனைபயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பண்டிகை காலக் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. வழக்கமாக கோவையிலிருந்து திருச்சிக்கு ஆம்னி பேருந்துகளில் ரூ.300 முதல் ரூ.400 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் பண்டிகை விடுமுறை எதிரொலியாக இக்கட்டணம் தற்போது ரூ.1,000 வரை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பேருந்துகளில்சாதாரண நாள்களில் அதிகபட்சமாக ரூ.300 வரை வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ.1,000 முதல்ரூ.1,300 வரை அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. இதேபோன்று கோவையிலிருந்து மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பண்டிகைக்குசொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள நடுத்தர, அடித்தட்டு மக்கள் சொலலொணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளின் இத்தகையஅத்துமீறிய கட்டண கொள்ளையைகட்டுப்படுத்தவும், கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.